அஸ்மி ஷரும் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு

 

Sharomஅரசாங்கத்தின் அதிகரித்து வரும் தேச நிந்தனைக் குற்றச்சாட்டு இப்போது கல்விமான்களையும் விட்டுவைக்கவில்லை. மலாயா பல்கலைக்கழகத்தின் சட்ட விரிவுரையாளரான அஸ்மி ஷரும் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் நாளை குற்றம் சாட்டப்படவிருக்கிறார்.

சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரம் குறித்து அவர் மலே மெயில் ஓன்லைனில் ஆகஸ்ட் 14 இல் எழுதியிருந்த கட்டுரைக்காக அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

மலேசியாகினி அவரிடம் தொடர்பு கொண்ட போது அவர் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார்.

அஸ்மிதான் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படும் அரசியல்வாதியாக இல்லாத முதல் நபர் ஆவார்.

வழக்குரைஞர்கள் கோபிந்த் சிங் டியோ மற்றும் மாலிக் இம்தியாஸ் ஆகிய இருவரும் நாளை நீதிமன்றத்தில்  அஸ்மியை பிரதிநிதிப்பார்கள்.