பாஸ் மகளிர் தலைவர் சித்தி ஸைலா முகம்மட் யூசுப், சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு டாக்டர் வான் அசிசாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிக்கும் அறிக்கையில் தாம் கையெழுத்திடவில்லை என்கிறார்.
அந்த அறிக்கை, டிஏபி, பிகேஆர் மகளிர் தலைவர்கள் சொங் எங், ஸுரைடா கமருடின் ஆகியோருடன் சித்தி ஸைலாவின் ஒப்புதலையும் பெற்ற பின்னரே வெளியிடப்பட்டது என இதுகாறும் கருதப்பட்டது.
அறிக்கையில் திருத்தம் செய்ய நினைத்ததாகவும் அதற்குள் அது வெளியிடப்பட்டு விட்டது என்று சித்தி ஸைலா பாஸ் செய்தித்தாளான ஹராகாடெய்லி- இடம் கூறினார்.
“திருத்தம் செய்வதற்குள், அதில் கையெழுத்திடுவதற்குள் அது வெளியிடப்பட்டு விட்டது”, என்றாரவர்.
தாம் அசிசாவுக்கு ஆதரவு தெரிவித்தது உண்மைதான் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். ஆனால், தம் ஆதரவு கட்சியின் முடிவை அடிப்படையாகக் கொண்டது என்றார். அவரது கட்சியான பாஸ் அசிசாவுடன் பிகேஆர் தலைவர் அஸ்மின் அலியின் பெயரையும் மந்திரி புசார் பதவிக்கு முன்மொழிந்துள்ளது.
சரியான ‘அந்தர்’ பல்டி. வான் அசிசாவுக்கு ‘நாற்காலி’ இல்லை என்பது தெரிந்துவிட்டதோ!
இவங்கலாம் ஒரு தலைவி ஒரு அறிக்கியை கூட செறிவற எழுத,அனுப்ப தெரியல அப்புறம் எப்படி …………?கொசொங் கொசொங் கொசொங் கேபலா
நாம் உம்மை படித்துவிட்டோம்,நீர் என்ன செய்தாய் யென்று,மாட்டிக்கொண்டாய்,புலம்புகிறீர்.உம் நடிப்பு கண்ணீறைதான் யாம் கண்டோமே.நாராயண நாராயண.
பாஸ் கட்சியில் ஒருவர் கூட நேரடியாக பதில் கூர மாட்டிர்களா அது ஏன் காதை சுற்றி மூக்கை தொடுகிறிர்கள்?
\
ஐயையோ, நான், என்னையறியாமல் உளறிவிட்டேன்… பாஸ் தேசிய தலைவர் முடிவு என்னவோ அதுவே என்னுடைய முடிவு என்று மாற்றறிக்கை விடவேண்டியதுதானே??? இது என்ன பாஸ் கட்சியில் புதுசா???
நம் மக்கள் எதை நோக்கி பயணிக்கின்றனர் என்று புரீயவில்லை,தலைமைக்கு கட்டுப்பட்டால் தப்பு,கட்டுப்படாவிட்டால் தப்பு.எதற்கும் அடிப்படை இல்லா கருத்தை,மனதில் தோன்றுவதை பகிர்ந்து வருகின்றனர்,அறம் கொண்டு எழுதினால் அதாவது ஸ்ரீ வள்ளுவம் காட்டிய வழியில் எழுதினால் பலரும் யாம் முதல்கொண்டு அனைவரும் பயன் பெறலாம்.மனம் சஞ்சலப்பட கூடியது,பெரியோர் காட்டிய வழியே அறிவை அடிப்படையானது.ஒரு பிரட்சனையை எப்படி அணுகுவது என்று அனுபவசாலி என்ற பெரியோர் வழியே சிறந்தது எம் கருத்து,வாழ்க நாராயண நாமம்.