துணைப் பிரதமர் முகைதின் யாசினுடன் தொடர்புள்ள அம்னோ தரப்பு ஒன்று சிலாங்கூரைக் கைப்பற்றும் நோக்கில் பாஸ் விவகாரங்களில் தலையிட்டு வருவதாகக் கூறுகிறார் பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசா.
பாஸை பக்கத்தானை ரக்யாட்டிலிருந்து பிரித்து விட்டால் அதன்பின்னர் அம்னோ பாஸை நெருங்குவதும் அதனுடன் ஒத்துழைப்பதும் எளிதாகும் என்று அத்தரப்பு நினைக்கிறது.
“பாஸில் உள்ள சிலரை வசப்படுத்திக் கொண்டால் பாஸை விருப்பம்போல ஆட்டி வைக்கலாம் என்று அது நம்புகிறது”, என்றவர் கூறினார்.
ஆனால், அத்திட்டம் பலிக்காது. பாஸ் அம்னோவைப்போல் செயல்படுவதில்லை. அதன் செயல்பாடு வேறு மாதிரியானது என்று ஹுசாம் கூறினார்.