ஞாயிற்றுக்கிழமை மெர்டேகா கொண்டாட்டங்களுக்கு 15 நிமிடத்துக்கு முன், பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவனை அடையாளம் காட்டுபவருக்கு ரிம10,000 பரிசளிக்க டிஏபி எம்பிகளும் சட்டமன்ற உறுப்பினருமாக ஐவர் முன்வந்துள்ளனர்.
அக்குண்டு வீச்சில் எவரும் காயமடையவில்லை. முதலமைச்சர் அப்போது ஜார்ஜ்டவுனில் வேறொரு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
“48 மணி நேரம் ஆயிற்று சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யாத ஐஜிபி தம் கடமையில் தவறி விட்டார்”, என ஜெலுத்தோங் எம்பி ஜெவ் ஊய் கூறினார்.
“போலீசார் கைது செய்வதற்கு உதவியாக குண்டு வீசியவனை அடையாளம் காண்பிக்கும் ஒருவருக்கு நாங்கள் ரிம 10,000 வெகுமதி கொடுப்போம்”, என்றாரவர்.
அவருடன் இங் வை எய்க் (தஞ்சோங்), பி.கஸ்தூரிராணி (பத்து கவான்), சைரில் கீர் ஜொஹாரி( புக்கிட் பெண்டாரா), ஸ்டீபன் சிம் (புக்கிட் மெர்தாகாம்), ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் வொங் ஹொன் வாயும் இருந்தனர்
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதை வீரச்செயலாக நினைத்து IGP பெருமையுடன் இருக்கிறாரோ?
……………………நிருபித்து விட்டார் IGP !!!
ஆட்டை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு ஆட்டை காணோம் என்ற கதையாக இருக்கின்றது!!!
குற்றவாளிகளை பிடிக்கும் திறமை போலீசாரிடம் இல்லை.நம் நாட்டு போலீசார் லாயக்கற்றவர்கள் என்பதை நீங்கள் கொடுக்கும் இந்த பத்தாயிரம் நிரூபிக்கிறது. அதேவேளை மக்களை பாதுகாக்க நீங்களும் லாயக்கற்றவர்கள் என்பதை உங்களது இச்செயல் நிரூபிக்கிறது. ஆம். உங்கள் தலைவரின் வீட்டில் கையெறிகுண்டு வீசியவர்களை கண்டுபிடிக்க இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள். நல்லதுதான். ஆனால் உங்கள் தொகுதியில் உங்களுக்கு வாக்காளித்தவர்கள் இதே போன்ற பிரச்சினையில் மாட்டிக்கொண்டால், அவ்வகை குற்றவாளிகளை கண்டுப்பிடிக்க இதே போன்ற முயற்ச்சிகளை கையாண்டீர்களா?
அவன் இந்நேரம் za…d COMIDIYAN vettule இருப்பான் அங்க போயி தேடுங்க
டேய், எங்கேடா ஒளிந்து கொண்டாய்??? என்னிடம் சரணடைந்துவிடு… 10,000.00 ரிங்கிட். 50-50 பகிர்ந்துகொள்ளலாம்…எப்படி ஒக்கே வா???? வெடிவைத்து கொன்ற கொடூர கொலைக்கு காரணமானவனைத்தான் இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை. இவனையாவது போலிஸ் கண்டுபிடிக்கட்டும்!!!!
பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறான்…