குலா: ஸாகிட்டா அல்லது நாங்களா என்று மஇகா, மசீச, கெராக்கான் நஜிப்பிடம் கூற வேண்டும்

 

sun“போதும், இனிமேல் பொறுக்க முடியாது: ஒன்று ஸாகிட் வெளியேற்றப்பட வேண்டும் அல்லது நாங்கள் அமைச்சரவையிலிருந்து வெளியேறுவோம்” என்று மஇகா, மசீச மற்றும் கெராக்கான் கட்சிகள் பிரதமர் நஜிப்பிடம் துணிந்து கூற வேண்டும் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் இன்று அக்கட்சிகளை கேட்டுக்கொண்டார்.

மலாய்க்காரர்கள் அல்லாதாருக்கு மலாய்க்காரர்கள் காட்டிய கருணைக்கான பலனை மலாய்க்காரர்கள் இப்போது அனுபவிக்கிறார்கள் என்று நேற்று அம்னோ சிகாம்புட் தொகுதி கூட்டத்தை திறந்து வைத்து பேசிய அம்னோ உதவித் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

இப்போதெல்லாம் மலாய்க்காரர் அல்லாதவர்கள் அதிகப்படியான திமிர் பிடித்தவர்களாகி1 kula வருகின்றனர். அவர்கள் பூமிபுத்ராக்களையும், ஆட்சியாளர்களையும், இஸ்லாத்தையும் அவமதிக்கின்றனர் என்று அவர் கூறியிருக்கிறார் என்றார் குலா.

“கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய தேவையில்லாமல், நமக்கு நன்றிக் கடன் பட்டவர்களாக இருக்க அவர்களை நாம் அனுமதித்தோம். ஆனால், அவர்கள் ஜனநாயகம், பேச்சு சுதந்திரம் மற்றும் உலகமயம் என்ற போர்வையின் கீழ் இப்போது இஸ்லாத்தையும் மலாய்க்காரர்களையும் அவமதிக்கின்றனர்”, என்று ஸாகிட் கூறியிருப்பதை குலா சுட்டிக் காட்டினார்.

இனவாத வெறுப்பை தூண்டி விடும் வகையில் செயல்பட்டு வரும் தீவிரவாத அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் தனிப்பட்டவர்கள் போல் அன்றி ஸாகிட்டின் நடத்தை வேறுபட்டிருக்கிறது.

இவர் கடந்த மே மாதம் நடைபெற்ற தெலுக் இந்தான் இடைத் தேர்தலின் போது சீனர்களை நன்றி கெட்டவர்கள் என்று வர்ணித்தார்.

“தெலுக் இந்தானுக்கான மே 31 இடைத் தேர்தலில் பாரிசான் நேசனல் வேட்பாளர் மா சியு கியோங் தோற்றால், சீனர்கள் மட்டுமே மகிழ்ச்சி அடைவார்கள், ஏனென்றால் அவர்கள் செல்வந்தர்களாகி விட்டனர், அதற்கான நன்றியும் இல்லாதவர்கள்”, என்று அவர் கூறியிருந்தாக தெரிவிக்கப்பட்டது.

மலாய்க்காரர் அல்லாதவர்களை கடுமையாகத் தாக்கி ஸாகிட் வெளியிட்டிருக்கும் அவரது மிக அண்மையக் கருத்து ஒன்றை உறுதிப்படுத்துகிறது: அவர் முற்றிலும் தகுதியற்ற அமைச்சர். அவர் அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று குலா வலியுறுத்தினார்.

மலாய்க்காரர் அல்லாதவர்களை கடுமையாகத் தாக்கி கருத்து வெளியிடுவதின் வழி அம்னோ உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவதையும் தூண்டிவிடுவதையும் விரும்பும் ஓர் அமைச்சருக்கு அமைச்சரவையில் இடம் இருக்கக் கூடாது என்று குலா தெரிவித்தார்.

தமது ஒரே மலேசியா கோட்பாட்டில் பிரதமர் நஜிப் தீவிரம் கொண்டவர் என்றால், அவர் துணிவுடன் செயல்பட்டு ஸாகிட்டை அமைச்சரவையிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று குலா கேட்டுக் கொண்டார்.