இரண்டு வாரங்களில் நடைபெறவுள்ள பாஸ் பேராளர் மாநாடு ஜோகூர் பாருவில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட இடத்தில் நடக்காது.
சூத்ரா மாலுக்கு அருகில் உள்ள திறந்த வெளியில் அது நடப்பதாக இருந்தது. ஆனால், அதன் உரிமையாளர் “சில தரப்புகளின் நெருக்குதலுக்கு ஆளானதால்” கட்சி கொடுத்திருந்த ரிம75,000 முன்பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார் என பாஸ் உதவி தலைமைச் செயலாளர் கைருல் பய்ஸி அஹ்மட் கமில் கூறினார்.
எனவே, மாநாடு இப்போது பத்து பஹாட்டில், ஸ்ரீகாடிங் மாவட்டத்தில் நடைபெறும். மாநாட்டுக்காக அங்குள்ள ஒரு நிலப்பகுதி திருத்தி அமைக்கப்படும்.
எங்க நஜிப் வீட்டிலா போடுங்கடா…………………………