அம்பிகா: பிரதமரே, இது வீரம் அல்ல

 

Not Courageதமது நாட்டு மக்களையே கொடுமைப்படுத்துவது வீரமல்ல என்று பிரதமர் நஜிப் ரசாக்கை மலேசிய வழக்குரைஞர் மன்றம் மற்றும் பெர்சே இயக்கம் ஆகியவற்றின் முன்னாள் தலைவரான அம்பிகா சாடினார்.

துணிச்சல் என்பது குறைகூறல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது என்பதாகாது, அது கொடுமைப்படுத்துதல் ஆகும் என்று கூறிய அம்பிகா, “குறைகூறல்களை எதிர்கொள்வது மற்றும் குறைகூறுவோர்களுடன் கருத்துப் பறிமாற்றம் செய்வது போன்றவைதான் துணிச்சல். அதைத்தான் நாம் தலைமைத்துவத்திடமிருந்து எதிர்பார்க்கிறோம்”,என்றாரவர்.

தற்போது தேசிய நிந்தனைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் கடும் நடவடிக்கை “உமது சொந்த மக்களையே கையாளும் வெறுக்கத்தக்கச் செயல்”, என்று அவர் வர்ணித்தார்.

எம்எச் 17 சம்பவத்தில் நஜிப் உக்ரெய்ன் பிரிவினைவாதிகளுக்கு ஈடுகொடுத்து சிறப்பாகச் செயல்பட்டது போல் இங்கும் செய்ய வேண்டும் என்று அவர் பிரதமரை கேட்டுக் கொண்டார்.

சமீபத்தில், பிரதமர் நஜிப் ஆற்றிய உரையில் ஒற்றுமையை வலியுறுத்தி பேசினார். உருமாற்றம் மற்றும் அகண்ட ஜனநாயக நடைமுறைambiga ஆகியவற்றுக்கு உறுதியளித்த பிரதமர் இப்போது “கொடுமைப் படுத்தி அடக்கும் முன்மாதிரிகளை” அமைக்கிறார். அதனை மற்றவர்கள் பின்பற்றுகிறார்கள் என்று தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார் அம்பிகா.

கொடுமைக்காரார்கள் சமுதாயமா?

மலேசியாகினி செய்தியாளருக்கு எதிராக பெர்காசா பெரும் எண்ணிக்கையில் செய்துள்ள போலீ புகார்கள் பற்றி குறிப்பிட்ட அம்பிகா, “நாம் என்ன கொடுமைக்காரர்கள் சமுதாயமாக மாறிக் கொண்டிருக்கிறோமா?”, என்று வினவினார்.

(தேச நிந்தனை) குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறுவதின் வழி நஜிப் இவற்றை எல்லாம் மாற்ற முடியும் என்றாரவர்.

“நாம் இப்போது மாறுபட்ட யுகத்தில் இருக்கிறோம். இப்போதைய நிலைமையே வேறுபட்டதாகும், சோசியல் மீடியா இருக்கிறது, விபரம் தெரிந்த மக்கள் இருக்கிறார்கள்.

“நமது தலைவர்கள் அறிவு குறைந்திருந்த இருண்ட காலத்திற்கு உரிய திட்ட அமைப்புகளிலிருந்து வெளியேறி 21 ஆம் நூற்றாண்டில் கால் பதிக்க வேண்டும்”, என்றார் அம்பிகா.