பாஸ் வெளியேறினால், அனைவருக்கும் இழப்பு, கூறுகிறார் பாஸ்காரர்

 

All lose if Pas quitsசெல்வாக்கு மிக்க ஹராக்கா கட்டுரையாளர் ஒருவர் “காஜாங் பயணம்” பக்கத்தானிலிருந்து பாஸ் கட்சியை தனிமைபப்படுத்தும் முயற்சியாகிக் கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்.

காஜாங் பயணத்தால் உருவான சிலாங்கூர் நெருக்கடி எதிரணியான பக்கத்தான் ரக்யாட்டில் உறவு நிலையை பொசுக்கும் மருட்டலாகி இருக்கிறது.

சிலாங்கூர் மாநிலத்தின் அடுத்த மந்திரி புசாராக பிகேஆரின் தலைவர் வான் அஸிசா நியமிக்கப்படுவதில் பாஸ் பின்பற்றி வரும் முரண்பாடான போக்கால் அது அதிகப்படியான தாக்குதல்களை பெற்றுள்ளது.

சோசியல் மீடியாவில் பிகேஆர் மற்றும் டிஎபி ஆதரவாளர்கள் அவர்களுடைய கட்சிகள் பாஸ் கட்சியுடனான உறவை துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர்.

ஆனால், பலராலும் மதிக்கப்படும் பாஸ் கட்சியின் முன்னாள் தகவல் பிரிவு தலைவர் விவாகரத்து பக்கத்தானிலுள்ள அனைத்து கட்சிகளையும் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளார்.

பாஸ் வட்டாரத்தில் செல்வாக்கு மிக்க எழுத்தாளரான சுப்கி லத்திப், தற்போதைய மந்திரி புசார் காலிட்டை பதவியிலிருந்து அகற்றுவது மட்டுமல்லாமல், காஜாங் பயணம் பாஸ் கட்சியை பக்கத்தானிலிருந்து தனிமைப்படுத்தும் நோக்கத்தையும் கொண்டிருந்தது என்று அவர் ஹராக்காடெய்லியில் எழுதியுள்ளார்.

மலாய்க்காரர் அல்லாதவர்களின் வாக்குகளின் முக்கியத்துவத்தை பாஸ் கட்சி அன்வார் இப்ராகிம் தொடக்கப்பள்ளிக்கு செல்வதற்கு முன்பே உணர்ந்திருந்தது என்று லத்திப் சுட்டிக் காட்டியுள்ளார்.

சீன வாக்குகளை அடைவதற்கான பாஸ் கட்சியின் முயற்சியை நாசப்படுத்தும் நடவடிக்கையில் அன்வார் இப்ராகிம் துணைப் பிரதமராகAll lose if Pas quits1 இருந்த காலத்தில் மகாதீருடன் இனைந்து ஈடுபட்டார் என்பதை லத்திப் நினைவு கூர்ந்தார்.

“பாஸ் தொடக்கத்திலிருந்து பக்கத்தானிலிருந்து சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. பக்கத்தானிலிருக்கும் பாஸ்சின் நண்பர்கள்தான் வேறுபாடுகளைக் கலைவதற்கு பாஸ்சுக்கு உதவவில்லை”, என்று அவர் மேலும் கூறினார்.

நிலைமை இப்படி இருக்கையில், பக்கத்தானிலிருந்து பாஸ் வெளியேறினால், பிகேஆரும் டிஎபியும் கூட பல இருக்கைகளை இழக்க நேரிடும்.

மலாய்க்காரர்களின் வாக்குகளை கொண்டுவர பாஸ் பக்கத்தில் இல்லாமல் டிஎபி ஒரு “மலேசியன் மலேசியா” கட்சியாக மாற இன்னொரு 50 ஆண்டு காலத்திற்கு காத்திருக்க நேரிடும்.

“அதற்குள், கிட் சியாங் போய் விடுவார். பின்னர் அவரது மகன் லிம் குவான் எங்கும் கூட.

” ‘சகோதரர்’ அன்வாரின் இழப்பு என்னதாக இருக்கும்? பிரதமராகாமல் காலமாகி விடுவாரா?” என்று லத்திப் வினவியுள்ளார்.