நேற்று மாலை பிகேஆர் அரண்மனையிலிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றது. அக்கடிதம் மந்திரி புசார் நியமனம் பற்றியதாக இருக்க வேண்டும் என்று நம்பப்பட்டது.
பிகேஆர் தலைமையக அதிகாரி இரவு 8.00 மணி அளவில் அரண்மனையிலிருந்து கடிதம் கிடைத்ததை மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினார்.
அக்கடிதத்தின் உள்ளடக்கம் குறித்து பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியான் அறிக்கை வெளியிடுவார் என்று கூறப்பட்டது.
அவ்வாறே, சைபுடின் ஓர் அறிக்கையை வெளியிட்டார். ஆனால், அதை திரும்பப் பெற்றுக்கொண்ட அவர், அறிக்கையின் உள்ளடக்கம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று காரணம் கூறினார்.
திருத்தப்பட்ட அறிக்கையை கட்சி நாளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியின் அறிக்கை வெளியிடப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே கட்சிக்கு நெருங்கிய வட்டாரங்கள் அரண்மனை அனுப்பியுள்ள அந்த சுருக்கமான கடிதத்தில் பிகேஆர் “இரண்டுக்கும் கூடுதலான” வேட்பாளர்களை நியமிக்க வேண்டும் என்ற அதன் அறிவுறுத்தலை மீண்டும் கூறியிருப்பதாக தெரிவித்தன.
ஒரு பக்குவப்பட்ட, அதுவும் தகுதி உடைய மூத்தக் குடிமகளான பெண், முதலவராவதற்கு இவ்வளவு கெடுபிடியா!!! இன்னுமா பெண்ணடிமை நடப்பில் உள்ளது??? பெண்ணினமே அடுத்த நடவடிக்கை என்ன என்பதைப் பற்றி சற்று சிந்தியுங்கள். இதற்கெல்லாம் கரணியம் பாஸ் கட்சி தானோ???
இவ்வளவுதானே 1. வான் அசிச 2. சேவியர் ஜெயக்குமார்.
தலையே சட்டத்தை திருப்பிப் போட்டு கூத்து ஆடினால் சாதாரண மக்கள் எவ்வாறு சட்டத்தை மதிப்பார்கள்?
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பேராக்கில் முன்பு நடந்த மாதிரி இங்கும் செய்யவே முயற்சி. ஆனால் பெரும்பான்மை இல்லை. எவனையும் நம்புவதற்கு இல்லை. மக்களின் வரிப்பணத்தில் தின்பவனகளுக்கு இதெல்லாம் புரியாது.
கைக்கு கை மாறி கட்சி தாவும் வரை இந்தத் தெருக்கூத்து தொடரும்போல் தோன்றுகிறது. “ஜனநாயகம்” என்ற சொல்லுக்கே அர்த்தமில்லாமல் ஊஞ்சலாடுகிறது… அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்று கொண்டால் அரசமைப்பு சட்டம் அர்த்தமின்றி போய்விடும்.
வான் அசிசவே வேண்டும். தயக்கம் வேண்டாம் PKR .
மாநில சுல்தான் மக்களின்பால் அக்கறை கொண்டவர். தற்கால அரசியல் சூழ்நிலையை அறிந்து சிறந்த முடிவினை எடுப்பாரென்றே நம்புவோம்…
ஒரே பதில். முடிவான பதில். நீதிக் கட்சியின் தலைவர் மட்டுமே சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்று இருப்பதால் எங்கள் கட்சி வேறு எவரையும் மும்மொழி இயலவில்லை என்பதனை சமஸ்தானதிபதிக்கு தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று பதில் அனுப்புங்களேன். இது கூடவா உங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்?. யாருக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கின்றதோ அவரைத்தானே அரசியல் கட்சிகள் முன் மொழிய முடியும். பெரும்பான்மை ஆதரவு இல்லாத ஒருவரை எப்படி அரசியல் கட்சிகள் முன் மொழிய முடியும்?. இது என்ன கேனத்தனமான விவகாரமா இருக்கு. இந்த காலம் தாழ்த்தும் வேலை எல்லாம் அடுத்த வாரத்தில் தண்ணீர் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பிறகுதான் முடிவுக்கு வரும் போலிருக்கு. சோழியன் குடுமி சும்மா ஆடாது.
மக்கள் : அரண்மனைக் கடிதம் இரண்டுக்கும் கூடுதலான பெயர்கள் வேண்டும் என்று கூறுகிறதே ???
நக்கல் : 30 பெயர்களை சமர்ப்பியுங்கள்.”ஒருநாள் முதல்வர்” பாணியில் தினமும் ஒருவர் மந்திரி புசாராக செயல்பாட்டால், SELANGOR மந்திரி புசார் பிரச்சினையை தீர்த்து விடலாமே !!!
நீதியும் நேர்மையும் தலை தூக்க, சட்டத்தை மக்கள் மதித்து போற்ற எமது ஆதரவு ஜனநாயகத்துக்கே!!!! மக்கள் தேர்வே மகேசன் தேர்வாய் சுல்தான் முடிவெடுப்பாரென்றே நம்புவோம்.
மக்கள் விருப்பம் வான்…ஒரு பெண் மாநில முதல்வர் ஆவது தவறு இருபதாக தெரிய வில்லை.
பாவம் அரண்மனை குழம்பி கிடக்கிறது !
பெண்களுக்கு , ஆண்களின் அடிமை விலங்கு இன்னும் முதிர்ச்சி பெறவில்லை .2014————
அரண்மனைக் கடிதம் மீண்டும் கோருகிறது,,என்பெயரி கொடுங்கடா ,,என் பெயர் முனியாண்டி
அய்யா தேனீ, நான் நினைச்சேன் ! நீங்கள் சொல்லிட்டிங்க .
கைக்கு கை மாறி தவளைகள் கட்சி தாவும் வரை இந்த அவல/ கேவல அரசியல் நாடகம் தொடரும் போல் தோன்றுகிறது..