பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போவுடன் நடத்திய நேர்காணல் பற்றி விசாரணை நடத்துவதற்காக மலேசியாகினியின் செய்தியாளர்/துணை ஆசிரியர் சூசன் லூன் நோர்த்ஈஸ்ட் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு இன்று நண்பகலில் வருமாறு கூறப்பட்டுள்ளார்.
சூசனும் ஓன்லைன் செய்தி தளமும் தேச நிந்தனைச் சட்டம் 1948, செக்சன் 41c இன் கீழ் விசாரிக்கப்படவிருக்கின்றனர். போலீஸ் தடுப்புக்காவலில் இருந்த போது பீ பூனுடன் மாநில தன்னார்வ காவல்படையில் (பிபிஎஸ்) அவரது பங்கு பற்றி சூசன் நடத்திய நேர்காணலை வெளியிட்டது நிந்தனையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இன்று நண்பகலில் விசாரணைக்காக ஜாலான் பட்டாணி போலீஸ் தலைமையகத்தில் இருக்க வேண்டும் என்று நேற்றிரவு மணி 11. 30 அளவில் தமக்கு தெரிவிக்கப்பட்டதாக சூசன் கூறினார்.
தாமும் இன்று விசாரிக்கப்படவிருப்பதாக பீ பூன் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பெர்காசா மற்றும் 13 இதர அரசு சார்பற்ற அமைப்புகள் செய்திருந்த 10 புகார்கள் அடிப்படையில் போலீசார் இந்த விசாரணையை தொடங்குகின்றனர்.
செலங்கோர் மாநிலத்திலும் குடைய ஆரம்பித்து விட்டார்கள் !
மக்கள் : தினமும் தேசநிந்தனை, விசாரணை, கைது என்று செய்திகள் வருகிறதே ஏன் ???
நக்கல் : போலிசில் வெட்டியாக சம்பளம் வாங்குபவர்களுக்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் BN அரசாங்கத்திற்கு தோன்றி இருக்கலாம்.
செய்தியாளர்களுக்கு சுகந்திரம் வழங்கவேண்டும் ,அவர்களையும் குற்றவாளிகளை விசாரிக்க கூடாது .
இனிமேல் யார் கூறினாலும் செய்தியாளர்கள் பதிவு
செய்துக்கொள்ளுங்கள் ,கருத்தை சொன்னவர்கள் அரசியல்
வாதிகள் தீடீரென்று பல்டி அடித்து விட்டால் பிறகு உங்களுக்கு தான் ஆபத்து .உஷார் -உஷார் செய்தி எடுப்பதில்
உஷார் .
இவன்கள் யென்ன சோப்பு போட்டாலும் வெளுக்கமாட்டான்கள் . சூழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது !!!!
இவர்கள் சுத்தமாக இருக்கவிரும்புவது இல்லை. ஆகவே நீங்கள் எவ்வளவு முயற்சி செய்து, வற்புறுத்தி சோப்பு போட முயன்றாலும் அவர்கள் போட்டுக்கொள்ள மாட்டார்கள். வீண் முயற்சி.