சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு பிகேஆர் தலைவர் வான் அஸிசாவை நியமித்த பக்கத்தான் தலைமைத்துவ மன்றத்தின் முடிவை ஏற்றுக்கொள்வதாக பாஸ் முதலில் அறிவித்திருந்தது. பின்னார், வான் அஸிசாவுடன் பிகேஆரின் துணைத் தலைவர் அஸ்மின் அலியின் பெயரையும் சேர்த்து இரு பெயர்களை அரண்மனைக்கு அனுப்பி வைத்தது.
இதனிடையே, பாஸ் அதன் சொந்த வேட்பாளரின் பெயரையும் சேர்த்து மூவரின் பெயர்களை அரண்மனைக்கு அனுப்பியிருந்ததாக வெளியான செய்தியை அக்கட்சியின் ஒரு சாரர் மறுத்தனர். மற்றவர்கள், அப்படியா என்றனர். இன்னும் சிலர் இப்படி, அப்படி என்று கதை விட்டனர்.
இப்போது, பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்காக தமது கட்சி அதன் சொந்த வேட்பாளரின் பெயருடன் பிகேஆரின் இதர இரு பெயர்களையும் சேர்த்து அரண்மனைக்கு அனுப்பியதை ஒப்புக் கொண்டுள்ளார்.
பாஸ்சின் அந்த வேட்பாளர் யார்? பெயர்களை வெளியிட அவர் மறுத்து விட்டதாக பாஸ் கட்சியின் ஹராகா டெய்லி இன்று தெரிவித்துள்ளது.
எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என பாஸ் ஒப்புக்கொள்கிறது.
பாஸ்சின் பாச்சா பலிக்குமா? நம்பிக்கை பெறுமா?
குளறுபடியான செயலுக்கு மறு பெயர்தான் பாஸ்!!! நல்ல வேலை சில தெளிவான ஆட்களும் அங்கே உண்டு. அதுதான் ஆறுதல்!
சீக்கிரம் நாடகத்தை முடிங்கப்பா..சன் டிவி நாடகங்களை மிஞ்சிவிடும் போலிருக்கிறது இந்த மக்கள் கூட்டனி நாடகம். டைரக்டரை முதலில் உள்ளே அனுப்பினால் எல்லாம் சரியாகிவிடும்…
ஆட்டு குட்டியின் தோல் போர்த்திய குள்ளநரி என இந்த பாஸ் குருப் நிரூபித்து விட்டது. உடனடியாக இதனை வெளியேற்றுவதே பக்தனுக்கு நல்லது. இல்லையெனில்…….. காலமே பதில் சொல்லட்டும் போ!!!!!! 🙁