தேச நிந்தனைச் சட்டத்தை அகற்றப்போவதாகக் கூறியது உண்மை என்றால் அரசாங்கம் அச்சட்டத்தைத் தற்காலிகமாக தள்ளிவைக்க வேண்டுமென வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“தற்காலிக தடை விதித்த பிறகு அதை அகற்ற 20 ஆண்டுகள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். யார்மீதும் தேச நிந்தனைக் குற்றம் சாட்டாதீர்கள், அவ்வளவுதான்”, என்றாரவர்.
கடந்த ஒரு மாதமாக பலர்மீது தேச நிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டிருப்பதால் தேச நிந்தனைச் சட்டத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது.
அம்மா அம்பிகா..pps போன்ற இயக்கங்களை உருவாக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்..அதை விட்டு..அரங்கத்தையும் சட்டத்தையும் குறை கூருகிரிர்..அப்படியென்றால் மாநிலத்துக்கு ஒரு ராணுவம் அமைத்து கொள்வோமா.
மக்கள் :அம்பிகா ஸ்ரீனிவாசன் கோரிக்கை பிரதமரிடம் எடுபடுமா ???
நக்கல் : எடுபடுமா எடுபடாதா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த இரும்பு இந்திய பெண்மணியிடம் கேட்பதற்கு காதை நீட்டினால் உலக்கையை விட்டு ஆட்டிடுவார் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கும் பிரதமர் இவர் கோரிக்கைக்கு அடக்கியே வாசிப்பார்.
Shanti அவர்களே, முதலில் தனிமனித பேச்சு சுதந்திரம் என்ன சொல்லுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள் …..
http://www.direct.gov.uk/prod_consum_dg/groups/dg_digitalassets/@dg/documents/digitalasset/dg_070409.pdf
மேல தரபடிருக்கின்ற மனித உரிமை சாசனத்தின் முக்கிய கூற்றுகள் யாவை என்பதை படித்து, தெளிந்து, பின் எதற்கு தேச நிந்தனை சட்டத்தை பயன் படுத்தலாம் என்று கூறுங்கள் …..சரி அப்படியே உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றால், இதோ நான் தருகிறேன். ஒபந்த விதி 10 : வெளிப்பாடு சுதந்திரத்தை படியுங்கள் ! ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாமல் , அம்பிகா அவர்கள் கூறுவதற்கு மாறாக எதையாவது சொல்ல வேண்டும் என்று மட்டும் எழுதாதிர்கள் !
dhilip 2 அவர்களே, அதுதான் சொல்லிவிட்டீர்களே மண்ணாங்கட்டி என்று. உடைத்தால் ஒன்றுமே இருக்காது. வெங்காயமாவது சமையலுக்கு உதவும். ஒப்புக்கு கருத்து சொல்வதை விட கும்பகர்ணன்போல் குறட்டைவிட்டு கோட்டை விட்டு தூங்குவது நலம்…
எலும்பில்லா நாக்கு என்பதை நிரூபித்துவிட்டார். இதற்கு பெயர்தான் நம்பிக்கை…நம்பிக்கை நம்பிக்கை…!!!!!!
தனிமனித பேச்சு சுதந்திரம்..அது தவரான பயன்பாட்டில் உள்ளது..அதை தடுப்பதற்கே இது போன்ற சட்டம் தேவைபடுகிறது..எல்லாரும் பேசினால் நீங்கள் சொல்லும் வெங்காயம் தான் கடைசியில் மிஞ்சும் ..
அம்பிகா மக்கள் கூட்டனிக்கு சிக் சக் அடிக்கிறார் ..அதே போல் நீரும் சேர்ந்து அடிக்கிறீர்
..
Shanti நீங்கள் நல்லவர் ! ஆனால் ஒன்றை கவனிக்க மறுக்கிர்கள். அம்பிகா அவர்கள் “பிரதமரே, தேச நிந்தனைச் சட்டத்தைத் தள்ளிவையுங்கள்” என்று வேண்டுகோள் வைக்கிறார் ! அப்படி என்றால் தேச நிந்தனைச் சட்டத்தைத் தள்ளி வையுங்கள் என்று பொருள். ஆனால் நீங்கள் “அம்பிகா மக்கள் கூட்டனிக்கு சிக் சக் அடிக்கிறார் ..அதே போல் நீரும் சேர்ந்து அடிக்கிறீர்” என்று கூறுகிறிர்கள் ! கேட்ட கேள்வி ஒன்று ! கண்முடித்தனமான பதில் ஒன்று ! Shanti நீங்கள் இப்பவும் நல்லவர் ! நாங்கள் கேட்பதெல்லாம், கண் முடி எதையும் நம்பாதிர்கள் ! இப்படிதான் நம் சமுகம், கடந்த 50 ஆண்டுகளாக சாமீ வேலுவை நம்பி, மோசம்போனோம் ! இதற்கும் நீங்கள் எங்களை நிந்திக்கலாம் சண்டி அவர்களே !
நீங்க சொன்னதும் அவன் உடனடியா கேட்டுடுவான் பாருங்க ,போயி உங்க வேலையே பாருங்க அக்கா அம்பிகா
நீங்கள் சொல்வது சரிதான்..அனால் மக்கள் கூட்டனியும் அப்ப்படிதனே செயல்படுகிறது. சரி, மக்கள் கூட்டனி ஆட்சிக்கு வந்தால் மட்டும் நமது கோரிக்கைகள் நிறைவேருமா? முதலில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள், மூன்று கட்சிகள் மூன்று வெவ்வேறு கொள்கைகள். அதில் ஒன்றைத்தான் நாம் செலங்கோரில் பிரச்சனையில் பார்க்கிறோம். இது ஒரு தொடக்கமே..அப்படி ஆட்சி அமைந்தால், ஒற்றுமை நிலைக்குமா அல்லது அவர் அவர் இனத்துக்கு மட்டும் பாடுபடுமா? நாம் திரும்பவும் இன்று போல் போராடி தான் கேட்கனுமா?
திலிப் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்..நான் ஒன்றும் மக்கள் கூட்டனியின் எதிரி அல்ல..நடப்பு அரசாங்கத்தை மதிக்கிறேன்..முடிந்த வரை நடப்பு அரசங்கத்தால் சேர்ந்து இந்தியர்கள் எப்படி செயல்பட முடியுமோ அதை தான் குறிப்பிட்டேன்..MIC ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு முழு கட்சி பொறுப்பு ஆகாது. அனால் ஒன்று இன்று எதிர்க்கட்சி வலுவடைந்த பிறகுதான் நடப்பு அரசாங்கம் மிரண்டு போய் நம்மை கொஞ்சம் கவனிக்கிறது..அனால் மக்கள் கூட்டனி ஆட்சிக்கு வருவதில் எனக்கு உடன் பாடில்லை ஏனெனில் நாம் திரும்பவும் இந்த நிலைக்கே தள்ளப்படுவோம்..இது என் சொந்த கருத்து. இப்பொழுது இந்தியர்கள் நிலைமை ஊர் ரெண்டு பட்டாள் கூதாடிக்கு கொண்டாட்டம் ..
எருமை மேல் பெய்யும் மழை ஆகிவிட்டது உரைக்காது ????
Shanti உங்கள் பாதையை நான் குறை கூறவில்லை, மாறாக, இலக்கைத்தான் குறை கூறுகிறேன் ! நடப்பு அரசாங்கம், 50 மில்லியன் வரை இந்தியர்கள் நலன் காக்க தந்திருக்கிறது , 2008 பின் ! மறுபதற்கு இல்லை. ஆனால், அவை முறையே கிழே சென்று சேருகிறதா என்று தான் கேள்வி ? ம இ கா இருக்கும் வரை , தமிழர்களுக்கு ஒரு நல்ல திட்டமும் வராது ! அப்படியே வந்தாலும், அது ம இ கா தொண்டர்களையே சென்றடையும் ! போராடிய நாம் ! பலன் அவர்களுக்கு. உதர்ணதிர்க்கு, பிரதமர் , 4 கோடி , black – list ஆனவர்களுக்கு கடனாக தந்தார் ! ஆனால் ம இ கா , அதன் பாரங்களை நாங்கள் தாம் தருவோம் என்று கூறி , …… அடுத்தது என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கே தெரியும் ! போராடியது நாம் , தின்று தீர்ப்பது யாரோ ! இதற்க்கு முன், TELEKOM , CIME DERBY , TNB , என்று 5 நிறுவனகளின் ஷேர் தந்தார் துன் மகாதிர் ! நமது சாமி வேலு , அதை விற்று ம இ கா வில் சேர்த்துக்கொண்டார் ! என்ன செய்தோம் நாம்? அப்படி சாமி வேலுவின் பட்டறையில் உருவான தலைவர்கள் என்ன செய்வார்கள் ? 2008 ஹிந்ட்ரப் வந்த பிறகு , இந்தியர்கள் நலன் காக்க ஒரு MEETING நடந்தது. அதில் ம இ கா காரர்கள் எங்களுக்கு AIMST கல்லூரிக்கு scholarship வேண்டும் என்று கேடார்கள் ! இதுதான் அத்தியாவசிய தேவையா இபொழுது …. அப்படியே எதாவது மக்கள் குசல் இட்டால் , ம இ கா உடனே , இதோ தமிழ் பள்ளிகள் நிர்மாநிப்பிர்க்கு இவளவு செலவிடுகிரோன் என்பார்கள் …. இன்னமும் தமிழ் பள்ளியிலேயே நிற்கிறார்கள் ! ஒரு தமிழ் பல்கலை கழகம் அமைத்திருக்க வேண்டாமா ? உலக தமிழர்களிடம் நன்கொடை பெற்று ? இவ்வளவுக்கும் அரசாங்கம் , அவர்களை கண்டிபதில்லை ! அதுதான் நான் அரசாங்கத்தை குறை கூறுகிறோம் !
நீங்கள் சொல்லும் இலக்கை அடையத்தான் நாம் அனைவரும் போராடுகிறோம் ..ஆனால் மக்கள் கூட்டனியும் சரி அல்லது நடப்பு அரசங்குமும் நம்மை பகடையாக தான் பயன்படுத்துகிறது..இது மறுக்க முடியாத உண்மை.