அம்னோ: தனி இராணுவம் உருவாக்குகிறாரா குவான் எங்?

penangமுதலமைச்சர்   லிம்  குவான்  எங் மாநில தன்னார்வக்  காவல்  படை(பிபிஎஸ்)  என்ற  பெயரில்  இராணுவப்  படையொன்றை  உருவாக்கி  வருகிறாரா  என  பினாங்கு  அம்னோ  கேட்கிறது.

அதன்  தலைவர்  சைனல்  அபிடின்  ஒஸ்மான், அப்படையில்  மாநில  அரசு  கிட்டதட்ட  ரிம1.5 பில்லியன்  முதலீடு  செய்திருப்பதாகக்  கூறினார்.

“பிபிஎஸ்  அரசியல்  நோக்கம்  கொண்டதா  அல்லது  லிம்  இவ்வளவு  பெரிய தொகையைச்  செலவிடுவது  சட்டவிரோத  தன்னார்வலர்களைக்  கொண்ட ஒரு இராணுவத்தை  உருவாக்கவா?”, என்று  அவர்  அம்னோ  வலைத்தலத்தில்   வினவினார்.

இப்பணத்தை  ரேலா  படைக்குச்  செலவிட்டிருக்கலாம். அது  அரசியல்  நோக்கமின்றி மாநிலப்  பாதுகாப்புக்குப்  பாடுபட்டிருக்கும்.

ரேலா, பிபிஎஸ்-ஸிலிருந்து  வேறுபட்டது. பிபிஎஸ்-ஸைப் போல்  அது  டிஏபி  கொடியைத் தூக்கிப்  பிடித்துக்  கொண்டிருப்பதில்லை  என்றாரவர்.