பெங் ஹொக் மரணம் தற்கொலை அல்ல: முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

beng hockடிஏபி  அரசியல்  உதவியாளர் தியோ பெங்  ஹொக்  மரணத்தை விசாரணை  செய்த  நீதிபதி  அதன்மீது  வழங்கியிருந்த திடமில்  தீர்ப்பை  மேல்முறையீட்டு  நீதிமன்றம்  ஒருமுகமாக தள்ளுபடி  செய்தது.

நீதிபதி  முகம்மட்  அரிப்,  நீதிபதி மா  வெங் குவை, நீதிபதி  ஹமிட்  சுல்தான்  அபு பக்கார்  ஆகியோரடங்கிய  நீதிபதிகள்  குழு  அந்த  மேல்முறையீட்டை  விசாரித்தது. நீதிபதி  முகம்மட்  அரிப் அக்குழுவுக்குத்  தலைமை  தாங்கினார்.

நீதிபதி  மா, தம்  தீர்ப்பில், தியோவின்  இறப்பு  அவர்  மலேசிய  ஊழல்-தடுப்பு  ஆணைய(எம்ஏசிசி)த்தில் இருந்துபோது நிகழ்ந்துள்ளது  என்பதால்  அது  காவலில்  இருந்தபோது  நிகழ்ந்த  மரணம்  என்றார்.

தியோவின்  மரணம்  தற்செயலாக  நடந்த  ஒரு  விபத்தல்ல, அவர்  தற்கொலை  செய்துகொள்ளவும்  இல்லை.

ஒருவர்  அல்லது  பலர்  அவரது மரணத்துக்குக்  காரனமாக  இருக்கலாம்  என்று  மா  கூறினார்.

நீதிபதி  ஹமிட்  சுல்தான், இறந்தவர்  ஒரு  சாட்சிதான்  என்றும்  அவரிடம்  எம்ஏசிசி  அதிகாரிகள்  சட்டத்தை  மீறி  நடந்துகொண்டு  அவரது  மரணத்துக்குக்  காரணமாக  இருந்திருக்கிறார்கள்  என்றார்.

நீதிபதி  அரிப்பும்,  மற்ற  இருவரின்  தீர்ப்புடன்  உடன்படுவதாகக்  கூறி  கீழ்  நீதிமன்றத்தின்  தீர்ப்பை  நிராகரித்தார்.