சரவாக் பிகேஆர் இளைஞர் பகுதியும் பண்டார் கூச்சிங் தொகுதியும் சேர்ந்து தேச நிந்தனைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று கோரும் இயக்கமொன்றைத் தொடங்கியுள்ளன. இவ்வியக்கம் ஆண்டு முழுவதும் தொடரும்.
தேசிய இளம் வழக்குரைஞர்கள் குழு தொடங்கியுள்ள இயக்கத்துடன் தொடர்புகொண்ட இந்த இயக்கம் இன்று காலை 9 மணியிலிருந்து 11 மணிவரை குபா ரியாவில் தொடக்கி வைக்கப்பட்டு மகஜர் அனுப்புவதற்காக கையெழுத்து திரட்டும் நடவடிக்கையும் நடந்தது.
“இந்த இயக்கத்தை சரவாக்கின் மற்ற பகுதிகளுக்கும் கொண்டுசெல்லத் திட்டமிட்டிருக்கிறோம்”, என பிகேஆர் பண்டார் கூச்சிங் தொகுதித் தலைவர் சைமன் சியா சை ஜென் கூறினார்.
1948ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம் அகற்றப்பட வேண்டும் என நினைக்கும் அனைவரும், பாரிசான் நேசனலைச் சேர்ந்தவர்கள் உள்பட, இந்த இயக்கத்தில் சேர்ந்து கொள்ளலாம் என்றாரவர்.