பெர்காசா, தேச நிந்தனைச் சட்டம் அகற்றப்படும் என்று வாக்குறுதி கொடுத்ததற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது தாக்குதல் தொடுக்க ஆயத்தமாகி வருவதுபோல் தெரிகிறது.
எதிரணியினர் கோரிக்கையை ஏற்று நஜிப் அச்சட்டத்தை எடுத்தெறிந்தால் அவர் ஒரு பக்கத்தான் பிரதமர்தான் என்றுகூட பெர்காசா தலைமைச் செயலாளர் சைட் ஹசன் சைட் அலி கூறினார்.
“பிரதமரும் கட்சித் தலைவருமாக இருப்பவர் எதிரணி கோரிக்கைகளுக்குப் பணிந்து போனால் பிறகு நாங்கள் அம்னோ உறுப்பினர்களாக இருப்பதில் அர்த்தமில்லை.
“எதிரணியினர் கோரிக்கைகளுக்குத் தொடர்ந்து விட்டுக் கொடுத்துக்கொன்ண்டே இருப்பாரானால் அவர் பக்கத்தானைச் சேர்ந்த பிரதமர் என்றுதான் பொருள்படும்”, என்றவர் கூறினார்.
அவர் எதிர் அணி தலைவர் அல்ல, திருந்தி மக்களுக்கு நல்ல தலைவராக இருக்க முயற்சிக்கிறார். நல்ல பிரதமராக இருக்க முனைந்தால் அவர் கெட்டவர் என்று பீ எனுக்கு அர்த்தமா?.
பெர்காசாவும் அல்தாந்துயா நஜிப்பும் நன்னா வேஷம் போடுறா!
இவனுகளுக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டம். சொன்னால் வெட்க கேடு !