சிலாங்கூர் மந்திரி புசாரைத் தேர்ந்தெடுப்பதில் கட்சியின் மத்திய குழு செய்த முடிவு மீறப்பட்டிருப்பதை மலாக்கா பாஸ் ஆணையர் அட்லி ஸகாரி வெளிப்படையாகவே குறைகூறியுள்ளார்.
“சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தில் மத்திய குழு செய்த முடிவு ஒதுக்கப்பட்டதை அறிய வருத்தமாக உள்ளது”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
மந்திரி புசார் பதவிக்கு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அலுவலகம் பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் இருவர் பெயரையும் பாஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரையும் அரண்மனையிடம் பரிந்துரைத்திருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது அட்லி இவ்வாறு கூறினார்.
பாஸ் மத்திய குழு ஆகஸ்ட் 1-இல் முடிவு செய்திருந்த பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில், துணைத் தலைவர் அஸ்மின் அலி ஆகியோரின் பெயர்கள் பாஸின் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது மலேசியாகினிக்குத் தெரிய வந்துள்ளது.
ஒரு காலத்தில் மா இ கா’வும் சாமிவேலூ’வும் …இந்தியர்களை நடுகாட்டில் தொலைத்து விட்டதால் பக்கதானை நம்பி ….அன்வார் பின்னால் ஓடினார்கள்…..இப்பொழுது அன்வாரை PAS அடித்து கொண்டு இருக்கிறது ….அரசனை நம்பி …புருஷனை கை விட்டாளம்……