கெராக்கான்: பெர்காசா பிஎன்னைக் கைவிடுகிறதா? நல்லதாகப் போயிற்று

gerakபெர்காசா  இனி  பின்னை  ஆதரிக்கப்போவதில்லை  என்பதைக்  கேட்டு  மகிழ்ச்சியில்  துள்ளிக்  குதிக்கிறார்  கெராக்கான்  இளைஞர்  தலைவர்  டான்  கெங்  லியாங்.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  1948ஆம்  ஆண்டு தேச  நிந்தனைச் சட்டத்தை  அகற்றினால்  பிஎன்னுக்குத்  தம்   ஆதரவை  நிறுத்திக்  கொள்ளப்போவதாக  பெர்காசா  தலைவர்  நேற்று  அறிவித்திருந்ததுதான்  டான்னுக்கு  அப்படி  ஒரு  மகிழ்ச்சியைக்  கொடுத்துள்ளது.

“பெர்காசா  தலைவரின்  அறிக்கை  பிஎன்னுக்கு ஒரு  நல்ல  செய்தி  என்பதால் கெராக்கான்  இளைஞர்  பகுதி  அதை வரவேற்கிறது”, என்றாரவர். .

தேச  நிந்தனைச்  சட்டத்துக்குப்  பதில் தேசிய  நல்லிணக்க  சட்டம்  கொண்டுவரும்  நஜிப்பின்  முயற்சியை  கெராக்கான்  முழுமையாக  ஆதரிப்பதாகவும் டான்  கூறினார்.