ஹாடி: மாறுகருத்துடையோர் பாஸிலிருந்து வெளியேறலாம்

hadiபாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்,  அதிருப்தி கொண்டவர்கள்  கட்சியை  விட்டு  வெளியேறலாம்  என்று  கூறியுள்ளார்.

“பாஸில்  கருத்து  வேறுபாடு  கொண்டிருப்போர், சொந்த  கட்சியை  அமைக்க  விரும்பினால்  தாராளமாக  செய்யலாம்”, என்றாரவர்..

அவர்கள் கட்சியில் இருக்க  வேண்டியதில்லை. விலகுவதே  நல்லது  என்றார்.

மாறுகருத்து  கொண்டவர்கள்  கொசுக்கள்  போன்றவர்கள்.

“கொசுக்கள்  இருந்தால்  நிம்மதியாக  தூங்க  முடியாது”, என  ஹாடி  கூறினார்.

ஒரு  விளக்கக்  கூட்டத்தில்  அவர்  பேசியது  யுடியுப்பில்  பதிவேற்றம்  செய்யப்பட்டுள்ளது.