இந்நாட்டின் சுதந்திரத்திற்காக மலாய்க்காரர்கள் மட்டுமே உண்மையாகப் போராடினர் என்று இந்த நாட்டின் முன்னாள் நீதிபதியான அப்துல் ஹமிட் முகம்மட் நேற்று யூனிவர்சிட்டி சிலாங்கூர் (யுனிசெல்) நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கூறினார்.
அவசரக் காலத்தில் அச்சமூக உறுப்பினர்கள் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராகப் போராடி உயிர் தியாகம் செய்துள்ளனர் என்று கூறிய அவர், அதனால்தான் சுதந்திரம் கோரியவர்கள் மலாய்க்காரகள் என்று விளக்கம் அளித்தார்.
பிரிட்டீசார் மலாயாவை ஆண்ட போது மலாயன் யூனியனை எதிர்த்தவர்களும் மலாய்க்காரர்கள்தான் என்று மேலும் விளக்கம் அளித்தார்.
சுதந்திரம் வரப் போகிறது என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர்தான் அவர்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மலாய்க்காரர்-அல்லாதவர்கள் சுதந்திரத்திற்கான இயக்கத்தில் சேர்ந்து கொண்டனர் என்று அந்த முன்னாள் நீதிபதி கூறிக் கொண்டார்.
“பாருங்களேன், நோக்கங்கள் கூட வேறுப்பட்டவை. நாட்டை விடுவிக்க மலாய்க்காரர்கள் சுதந்திரத்திற்காக போராடிய வேளையில், மலாய்க்காரர்கள்-அல்லாதவர்கள் தங்களுடைய நலன்களை சுதந்திரத்திற்குப் பின்னர் பாதுகாப்பதற்காக அதைச் செய்தனர்.
“மலேசிய இந்திய காங்கிரஸ் (எம்ஐசி) முதலில் தோற்றுவிக்கப்பட்டதே தன்னார்வலர்களை இந்தியாவுக்கு அனுப்பி பிரிட்டீசாரிடமிருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் கோருவதற்காகும்”, என்று விகடத்தனமாக பேசி தமது அறிவின் ஆழத்தை அவர் வெளிப்படுத்தினார்.
உரிமைப்படி மலாயா பெடரேசனை மலாய்க்காரர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறிக் கொண்டார்.
“ஆனால், இல்லை. மலாய்க்காரர்கள் தங்களுடைய அதிகாரங்களைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்கப்படுகின்றனர். மேலும், ஒற்றுமை என்று கூறப்படும் ஒன்றுக்காக மலாய்க்காரர்கள் தங்களுடைய உரிமைகளை தியாகம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்”, என்றாரவர்.
இந்த முன்னாள் தலைமை நீதிபதி பெர்காசா போன்ற மலாய் அரசு சார்பற்ற அமைப்புகளால் உருவாக்கப்பட்ட தேசிய ஒற்றுமை கூட்டணிக்கு தலைமை ஏற்றிருக்கிறார்.
…………. பயல்கள, தமிழன் சீனன் மலாய்காரன் மூவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் சுதந்திரம் கொடுக்கப்படும் என்று BRITHISH அரசாங்கம் சொல்லியே கொடுத்தது ,தமிழனும் சீனனும் இல்லை என்றால் உங்கள் கதி ஊ…. போயிருக்கும்……………
தலை எழுத்து.நமது முன்னோர்கள் செய்த தவறு.இப்போ கண்ட நா…எல்லாம் நமது உழைப்பு ,விசுவாசம் ,நேர்மை ,உண்மை எல்லாவற்றையும் ஊனம் கண்ணால் பார்க்குது ,குரைக்குது.ஆங்கிலேயன் நமது உதிரத்தை சப்பி போய்விட்டான்.இப்ப இருக்கிற ஜடத்தைகூட வாழ விடமாட்டான் இந்த நா….கள்
அவர்கள், வரலாற்றையே மாற்றி மாற்றி எழுத இடம் கொடுத்து ;
தங்களையே ஏமாற்றிக் கொண்டவர்கள் ,அரசியலில் நம்மைப்
பிரதிநிதித்தவர்கள் தானே!!!
இனி நம் இளைய தலை முறை இவற்றை சமாளிக்க வேண்டுமே ???
உலகில் பாதிக்கு மேல் அடிமைப் படுத்தி ஆண்டவன் கூட இன்று
உண்மையான வரலாறு பற்றி நலமே பேணுகிறான் !
ஆனால் , இந்த திடீர் அதிகாரம் பெற்றவர்கள் உடன் நின்றவர்களை
இன்று உதாசீனப் படுத்தி செயல்படுவது ஈனர்களின் செயல் என்பதை
என்று அறிவார்களோ ???
மலாய்க்காரர் அல்லாத அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொதித்தெழுவார்களா? இந்நாட்டு சுதந்திரத்திற்காக வெள்ளையனை எதிர்த்து போரிட்ட சீனர்களின், தமிழர்களின்[மலாயா கம்யூனிஸ்டுகள் ] உயிரற்ற உடல்களை நேரில் கண்டவன் நான். ஒரு சில மலாய்க்காரர்களும் இருந்துள்ளனர். சரித்திரத்தையே மாற்ற முயலும் இவரெல்லாம் தேசத்த் துரோக பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.
நாட்டின் முன்னாள் நீதிபதியான அப்துல் ஹமிட் முகம்மட் கூறுவதில் சில உண்மைகள் இருந்தாலும்…பல உண்மைகளையும் சீர்துக்கி பார்க்கவேண்டும்……பிரிடிஷ் கொண்டு வந்த அரசியல், பொருளாதாரம், மற்றும் கல்வியில் சம உரிமை பங்கீட்டு முறை அங்கீகரிக்கப்பட்டிருந்தால்….. எங்கள் மூதாதையர்கள் உட்பட நாங்களும்… இந்நாட்டின் சுதந்திரத்திற்காக உண்மையாகப் போரடியிருப்போம்…..ஆனால்….பூமிபுத்ரா என்ற வார்த்தை தடுக்கிறது ..!!!!!
இவனைப் போன்ற சுயநலவாதிகளே நமக்கு மட்டுமல்ல இன்னாட்டிர்க்கே எதிரிகள்.
சுதந்திரம் என்பது மனிதர்களின் உயரிய உரிமையாம். மலாயா வரலாற்றை 1000ம் ஆண்டுமுதல் படிக்கச சொல்லவும். பிரித்சிஷ் காரனுக்கு சட்டம் எழுதியவன் இந்தியன் என்று கேள்வி பட்ட ஞாபகம். அதைதான் இங்கும் அமுல் படுத்தினார்களாம். 1400 கு பிறகு பரமேஸ்வரன் வழிதான் மலாய் மன்னர்கள்.1511 மல்லை மன்னர்கள் ஆட்சியை மலாக்காவில் போற்றுகீசியர்கள் கைப்பற்றினர் பிறகு டைசுக்காரகள் ,ஆங்கிலேயர்கள் ஆட்சிதான்.பிறகு பல இனக்கலவரங்கள் ….1954 தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் உருவானது அதன் சக்தி இவனுக்கு தெரியுமா?
1954 லில் கோலா லம்பூர் நகர மன்ற தேர்தலில் UMNO MCA MIC கூட்டணி போட்டி இட்டு பெரிய வெற்றியை தந்தது எல்லாம் நன்றிகெட்ட படிப்பா?
15 செப்டம்பர் 1954 மலையா கூட்டரசு சட்டம் எழுதியது யார் எப்படி அமுலுக்கு வந்தது.படிங்கடா?
சுதந்திரத்துக்கு முன்னே 1955ல் நாட்டின் முதலாவது பொது தேர்தல் 1956 ல் 27 செப்டெம்பரில் ரீட் கமிசன் அரசியல் சாசனம் அமுலுக்கு வந்தது.1957 மே 9ல் ரீட் கமிசன் ( என்றால் என்ன படிங்கடா) வெளியிடப்பட்டது.
1975 ஆகஸ்ட் 1 மலையா கூட்டரசு சாசனம் நாடாளுமன்றத்தில் ஏற்று சுதந்திர ஆட்சிக்கு அச்சாணியை அமைந்தது. 27 ஆகஸ்ட் கூட்டரசு சாசனம் நாட்டின் அரசு ஆச்சிக்கு அஸ்திவாரமாக அமைத்தது. “மக்களின் கூட்டு அரசு” விளங்குதா ? malayil solren RANG PERLEMBAGAN PERSEKUTU AN TANAH MELAYU பிறகு மலேசியா வாக மாறியது
1955 ல் பாலிங் பட்டணத்தில் கம்னிஸ்ட் சின் பெங் /துங்கு சந்திப்பு நடந்தது இதில் ம இ கா கலந்துக கொள்ள வில்லையாம் இது ஒரு கோளாறே இல்லையாம் .
ஒரு பாட்டு ஞாபகத்துக்கு வருது….புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்தி சாலி இல்லை ..சந்திர பாபு நாமம் வாழ்க!
இப்போது மலாய்க்காரன் எது வேண்டுமானாலும் சொல்லலாம். யாருக்கும் கேட்க முதுகு எழும்பில்லை. மற்ற இனத்தவர் ஏது சொன்னாலும் அதை அவன்கள் காதில் போட்டு கொள்ள போவதில்லை. நாம் என்ன சொன்னாலும் மலாய் இனவாதிகளே இந்நாட்டை தங்களின் கையில் வைத்து நம்மை எல்லாம் ஓரங்கட்டி எல்லாவற்றையும் அனுபவித்து ஏப்பம் விட்டு விடுவர்.
மலாக்காவின் சரத்திரம் மாற்றம் கண்டதுபோல நாட்டின்
சுகந்திரம் கிடைத்து என்பதை எப்படியாவது மாற்றி விட்டால் அப்புறம் வருங்கால சீனர் இந்தியர்களும் சலுகைகளை கேட்க மாட்டார்கள் என்று கனவு காண்கிறார் ஒய்வு பெற்ற நீதிபதி நைனா .
முதலில் இவன் வங்கி கணக்குகள்,சொத்துடைமை எல்லாவற்றையும் பொது மக்கள் பார்வையில் வைக்கட்டும்.
இப்போது மட்டும் என்ன வாழுதாம்? நமக்கு என்ன கிடைத்திருக்கிறது? நம்மை எல்லாம் ஓரம் கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. சீனர்கள் அவர்களின் வியாபார த்ரிமையால் ஈடு கொடுத்து வாழ்கிறார்கள் ஆனால் நம்மவர்கள்? எல்லாம் கண்கூடு. MIC துரோகிகளுக்கு மட்டும் ஒன்றுமே தெரியாது.
போடா முட்டல் கேடுகெட்டா …………………
yap அலாய், parameswara சறிதிரம் ……………………..
நம் கடவுளை சீன்டியவனை கன்னம் பிடித்து முத்தம் கொடுத்தோம்-
அமைச்சரை அறைவிட்டவனை மன்னித்தோம் –
மிளகாய் தூள் இமாம் மை கைகொடுத்து தப்பவிட்டோம்
இவனையும் மன்னித்தால் குடியா முழுகும் ?
இன்னொரு இண்ட்ராப் வர வைப்பாங்களோ ?
கடவுளின் நம்பிக்கை உள்ளவன் பேசும் பேச்சல்ல இது ! இவன் பாட்டன் பிறக்கும் முன்னமே கடாரம் கண்டவன் தமிழன் , இந்த புரம்போக்குக்கு எங்கே தெரியபோகுது இந்த நாட்டின் சரித்திரம் ?
நண்பர் சிவா கணபதி அவர்களே! கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து இந்நாட்டு சுதந்திரத்திற்காக வெள்ளையனை எதிர்த்து போராடியவர் என் தந்தை. நண்பர் பொன் ரங்கன் கூறினாரே, பாலிங் பேச்சு, துங்குவும், கம்யூனிஸ்ட் தலைவர் சின் பெங்கும் எதற்காக கூடிப் பேசினார்கள் தெரியுமா? கம்யூனிஸ்டுடன் துங்குவுக்கு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது என யாராவது யோசித்தீர்களா? இந்நாட்டு சுதந்திரத்திற்காக போராடிய கம்யூனிஸ்டுகளை நம் சரித்திரம் துரோகம் செய்துள்ளது.
வயதான காலத்தில் புத்தி பேதலித்து இவரைப் போன்ற கூட்டுக் களவாணிகள் உளறுவதால் சரித்திரம் மாறிடாது.
அன்று கமுனிஸ் ஆங்கிலேயர்களை சுடவில்லை என்றால்,நமக்கு
ஏது சுதந்திரம் ? வரலாறு தெரியாத ஒரு நீதிபதி !
உண்மையை பொய்மையாக்கி இனவாத கருத்தை வெளியிடும் இந்த களவாணி மீது தேச நிந்தனை சட்டம் பாயாதோ????
தேச நிந்தனை சட்டம் என்பது ஓர் அம்னீசியா வியாதியைப் போன்றது. ‘Now you see, now you don’t’ என்பது போல.
இன்னும் கொஞ்சம் போனால் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் கூட சுந்தந்திரம் பெற்றுத் தந்தவர்கள் நாங்கள் தான் என்று சொல்வார்கள் இந்த பட்டை கட்டி வேந்தர்கள்…சரித்திரமே தெரியாத இந்த தரித்திரம் எத்தனை பேருக்கு தவறான தீர்ப்பளித்தானோ…இறைவனுக்கே வெளிச்சம்…
இந்நாட்டு ஆரம்பக்கால சரித்திரத்தையே மாற்றி எழுதியப் பொது சும்மா தலையாட்டிக்கொண்டிருந்த நம் அரசியல் தலைவர்கள் `சீட்டு` போய்டும் என்று வாய்மூடி இருந்துவிட்டார்கள் , இனி என்ன செய்ய முடியும்? அவனுங்களும் இனி திருந்த மாட்டானுங்க, சிந்திக்காமல் பேசும் இவனுங்க மாதிரி படித்த முட்டாள்களும் திருந்த மாட்டனுங்க! நாம பேசி ஒன்னும் ஆகப்போவது ஒன்னும்மில்லீங்க!