பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்லாயிலை வெளிப்படையாகவே இகழ்ந்துரைத்ததை அடுத்து கட்சியின் ஆன்மிகப் பகுதித் துணைத் தலைவர் ஹுருன் டின்னும் அசிசாவை இகழ்ந்துரைத்துள்ளார்.
“அவருக்குத் தகுதி இருந்திருக்குமானால் ஷுரா மன்றம் தொடக்கத்திலேயே ஆதரவு தெரிவித்திருக்கும்”, என நேற்று பாங்கியில் அவர் கூறினார்.
பெண் என்பதற்காக வான் அசிசாவை நிராகரிக்கவில்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
பொறுப்பான பதவி வகிப்போருக்குத் தகுதி முக்கியம். வான் அசிசாவைவிட தகுதியானவர்கள் இருக்கிறார்கள் எனவும் ஹருன் கூறினார்.
மனிதத் தேவைகள் அவ்வப்போது நிகழ்வது ,அது இவர்களை
இப்போது ஆட்டுவிக்கிறது !
அதான், அன்று பேசா மடந்தைகள் இன்று உளறுகின்றன !!!
பாவம் ,பணம் பாதாளம் வரை என்பது என்றுமே பொய்க்காது
போலும் !!!
வாழ்க பணநாயகம் !!!
விலை போன வீணர் பேச்சு நமக்கெதற்கு ,?காலம் கட்டாயம் ;
காலம் கடந்தாவது பதில் சொல்லும் !!!
கேடுகெட்ட …………….. தலைவர்களும் ஆடும் தரங்கெட்ட ஆட்டம் !
துவான் ஹருண் உங்கள் சுரா மன்றம் தொடக்கத்திலேயே மறுப்பு சொல்லியிருக்கலாமே ;அபொழுது வாயில் கொள்ளுகட்டையா வைத்திருந்தீர்கள் ?இப்படி மூடி வைத்து கழுத்தறுப்பது நியாயமா?
வான் அஜிஸா ஒரு டம்மி முதல் அமைசராகத்தான் இருப்பார்….