பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், பக்கத்தான் உணர்வுடன் பாஸுக்குத் தலைமைதாங்க இயலாவிட்டால் அக்கட்சியிலிருந்து விலகுவதே நல்லது என பிகேஆர் மகளிர் பகுதி கூறியுள்ளது.
பாஸ் மத்திய குழு சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை நியமனம் செய்வதை ஏற்றுக்கொண்ட பிறகும் அவரை நிராகரிக்கும் ஹாடி ஓர் “ஆணாதிக்கவாதி” என பிகேஆர் மகளிர் தகவல் தலைவர் அசுரா அசீஸ் கூறினார்.
“வான் அசிசாவுக்குத் தகுதி இல்லை என்று சொல்ல இவர் யார்? வான் அசிசாவிடம் போதுமான தகுதியும் அனுபவமும் உண்டு என்பதைச் சரியான-சிந்தனையுள்ள எவரும் ஒப்புக்கொள்வர்”, என அசுரா கூறினார்.
சரியான அடி!
ஏதோ ஒரு மட்டமான உள்நோக்கத்துடன் செயல் படுவதாக பட்சி சொல்லுது.
ஹடி லு ஜகன் சம்பூர் உருசன் செலங்கோர் லு berani mari SELANGOR ………………
ஒருவர் பதவிக்கு அமருமுன்னே ; அவரின் ஆற்றலை பற்றி பேசுவது அரை வேக்காட்டு தனம்.
அந்த ஒருவருக்காக கூட்டனியை நாசம் பண்ணிவிட்டாரே …பாவம் டப், ஆட்சிக்கு வந்தால் நிதியமைச்சர் பதவி கிடைக்கும் என்றெல்லாம் கனவு கண்டிருப்பான்..மண்ணை அள்ளி போட்டு விட்டார் அன்வர்.