பிகேஆர் தலைவர் அசிசாவைக் குறைகூறும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்-கை டிஏபி தலைவர்கள் சாடியுள்ளனர்.
இரண்டு மாநிலங்களை பிஎன்னிடம் பறிகொடுத்த அவருக்கு வான் அசிசாவைக் குறைசொல்லும் தகுதி இல்லை என்றவர்கள் கூறினார்.
“இவர் ஒரு தவணைக்கு மட்டும் மந்திரி புசாராக இருந்துவிட்டு திரெங்கானுவைப் பறிகொடுத்தார். கெடா மந்திரி புசார் பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்தபோதும் அவருக்குப் பதிலாக இன்னொருவரை நியமிக்க மறுத்தார்”, என சிலாங்கூர் டிஏபி தலைவர் டோனி புவா கூறினார்.
முடிவில் பாஸ், கடந்த தேர்தலில் கெடாவை இழந்தது.
ஆமாம், கெடாவையும் திரெங்கானுவையும் பறிகொடுத்ததுதான் ஹாடியின் சாதனை என சிலாங்கூர் டிஏபி துணைத் தலைவர் டெங் சான் கிம்-மும் கேலி செய்தார்.
ஹடியின் சாதனை நம்ம நஜிப்பின் …….. ஆகும் இவனும் ………… நம்ம BN கட்சியை போல
கூட்டணியில் ஒட்டி உரசி கூத்தடிக்கும்போது ஆஹா, ஓஹோ என ஒருவரை ஒருவர் புகழ்ந்து ஆராதனை செய்துக் கொள்கிறீர்கள், யாராவது ஒருவர் கொஞ்சம் தடம் மாறினால், அப்பப்பா, அவர் என்ன கிழித்தார், இவர் என்ன சாதனை புரிந்தார், என கண்ட மாதிரி விளாசித் தள்ளுகிறீர்கள். நல்ல கூட்டணி போங்கள்.
மூடி மறைப்பது கூட்டணியல்ல. அது பாரிசானே!!!!
டிஏபிகாரர்கள் இவ்வளவு நாலா மனதிற்குள் விசத்துடன் இருந்து இருக்கிறார்கள் எனபது இப்போது தெளிவாகி விட்டது.
காரணம், பினாங்கு கைக்கு வராது என்ற ஆதங்கமும் பயமும் இப்படி பேச வைக்கறது DAP யை ..
இந்த டி.ஏ.பி கட்சிக்காரன்களுக்கு தெரிந்ததெல்லாம், ஏழை தமிழர்களை சுரண்டுவதும் சூறையாடுவதும் தான்.
குருவிபோல் சேர்த்த பணத்தை, மற்றும் நகைகளை அடமானம் வைத்து மைக்காவில் போட்ட ஏழை தமிழர்களை/ இந்தியர்களை சுரண்டுனதும் சூறையாடுனதும் யார் திரு இராமசாமி அவர்களே??? டிஎபி கட்சியா????
இராமசாமி அண்ணா! DAP காரங்களுக்கு தெரிந்ததெல்லாம், ஏழை தமிழர்களை சுரண்டுவதும், சூரையாடுவதும்தான் என்று கூறுகிறீரே! மற்றவர்கள் சுரண்டுவதற்கும் சூறையாடுவதற்கும் தங்களை வளைந்து கொடுக்கும் இழிச்சவாயத்த் தமிழர்களை நொந்து கொள்ளுங்கள் சார். தமிழன் திருந்தவே மாட்டானா? அரசியல்வாதி என்பவன் நாடகமாடுபவன் தான். ஒப்புக்கொள்கிறேன். தமிழனுக்கு புத்தி இல்லையா? அரசியல்வாதியை நம்பலாமா?
இந்த ஹடி தன்னுடைய தோழமை கட்சிக்கு தெரியாமல் அச்மினை
முன்மொழிந்து நட்புறவு அரசாட்சியை சிலாங்கூரில் நிலைநிறுத்த பாரிசானுடன் கலந்து பேசியது இப்போ தெரியவந்துள்ளது ! இது ஒரு சதி திட்டமில்லவா ….. கூட இருந்தே குழி பரிக்கவள்ளமை கொண்டவராக இருந்திருக்கிறாரே ! வேலியே பயிரை மேய்ந்ததே ! இவருடை இந்த செயலினால் கிளந்தான் என்ன ஆகுமோ !