கெராக்கான் முன்னாள் தலைமை நீதிபதியை வன்மையாகக் கண்டிக்கிறது

 

Gerakan-Kokillanpillaiநாட்டின் சுதந்திரத்திற்கு மலாயக்காரர்-அல்லாதவர்களின் பங்களிப்பை சிறுமைப்படுத்துவதன் வழி மலேசியர்களுக்கிடையில் வெறுப்புணர்வை தூண்டி விடும் முன்னாள் தலைமை நீதிபதியின் செயலை கேராக்கான்CJex1 வன்மையாகக் கண்டிக்கிறது.

“இது அனைத்து மலேசியர்களுக்கும் எதிரான ஓர் அப்பட்டமான குற்றம். இது மலேசிய சமுதாயத்தில் வெறுப்புணர்வுக்கு வித்திடுகிறது”, என்று கெராக்கான் கட்சியின் உதவித் தலைவர் கோகிலன் பிள்ளை ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

அப்துல் ஹமிட்டின் கூற்று “வினோதமானது” என்பதோடு “கவலை” அளிப்பதாகும் என்று அவர் வர்ணித்தார்.

“அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினர் என்பதை நான் வலியுறுத்துகிறேன்”, என்று அவர் மேலும் கூறினார்.