சுல்தான் கொடுத்தாலும் நிராகரிப்போம்!

 

»Ø½Ìµ³ÖÐί»á¼ÇÕß»áஇன்று நடந்த பாஸ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் வேட்பாளர் நியமன விவகாரத்தில் அதன் தடுமாற்ற நிலைப்பாடு தெளிவாகத் தென்பட்டது.

பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு மந்திரி புசார் பதவியை சுல்தான் பாஸ் சட்டமன்ற உறுப்பினருக்கு கொடுத்தாலும் கட்சி அதனை நிராகரிக்கும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.

“Kita tolaklah”, (நாங்கள் நிராகரிப்போம்) என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

அதே செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி ஆட்சியாளர் எடுக்கும் எந்த முடிவுடனும் பாஸ் ஒத்துப் போகும் என்றார்.

“நாங்கள் அதனை சுல்தானிடம் விட்டு விடுகிறோம். அவர் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு பணிவோம்”, என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆகஸ்ட் 17 இல், பக்கத்தான் தலைமைத்துவ மன்றம் பிகேஆர் தலைவர் வான் அஸிசா வான் இஸ்மாயிலை சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு வேட்பாளராக நியமிக்க எடுத்த முடிவை பாஸ் ஏற்றுக் கொண்டது. இன்று, அதுவும் இல்லை, இதுவும் இல்லை, எதுவும் இல்லை என்ற நிலையில் பாஸ். இவர்களை எடைபோட வேண்டிய காலம் வந்து விட்டது என்ற கருத்து வலுத்து வருகிறது.