தேச நிந்தனைச் சட்டம் நீக்கப்படுமா, இல்லையா? நஜிப்புக்கே தெரியவில்லை

lawதேச  நிந்தனைச்  சட்டத்தை  அகற்றப்போவதாக  2012-இல் வாக்குறுதி  அளித்த  பிரதமர்  இப்போது  தயங்குவதாக  தெரிகிறது.

“தேச நிந்தனைச்  சட்டம்  தொடர்பில்  அரசாங்கம்  பல  தரப்பினருடனும்  கலந்துரையாடும்.

“மக்களுக்கு  வருத்தம்தரும்  எந்த  முடிவையும்  அரசாங்கம்  செய்யாது”, என்று  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறியுள்ளார்.

அந்தக்  காலனிகால- சட்டம்  தொடர்ந்து  பயன்படுத்தப்படுவதை மனித  உரிமை  ஆணையம் (சுஹாகாம்) போன்றவை  கண்டித்துள்ளன.

ஆனால், பெர்காசா  போன்ற  அமைப்புகள் அதை  ஆதரிக்கின்றன.