பிகேஆரும் டிஏபியும் எதிர்ப்பு காட்டுகின்றன: அரண்மனை குற்றச்சாட்டு

munirமந்திரி  புசார்  பதவிக்கு  சிலாங்கூர்  சுல்தான்  உத்தரவுப்படி  இரண்டுக்கும்  மேற்பட்ட  பெயர்களைப்  பரிந்துரைக்க  மறுத்திருப்பது  அவமதிக்கும்  செயல்  என்பதுடன்  எதிர்ப்பைக் காட்டும்  செயலுமாகும்  என  சிலாங்கூர்  அரண்மனை  கூறியுள்ளது.

பாஸ்  மட்டுமே  ஆட்சியாளரின்  உத்தரவுக்கேற்ப  நடந்து  கொண்டிருக்கிறது  என  சிலாங்கூர்  சுல்தானின்  தனிச்  செயலாளர்   முகம்மட்  முனிர்  பானி  ஒர்  அறிக்கையில்  கூறினார்.

“உத்தரவை மதிக்காத  பிகேஆர்  மற்றும்  டிஏபியின்  செயல்களால்  சிலாங்கூர்  சுல்தான்  வருத்தமடைந்துள்ளார்.

“டிஏபி  மற்றும்  பிகேஆரின்  செயல்  ஆட்சியாளரை  அவமதிக்கிறது  என்பதுடன்  அது  சிலாங்கூர்  சுல்தானுக்குச்  செய்த  துரோகமுமாகும்”, என்றாரவர்.