ஆட்சியாளர்களை அவமதித்தார் என்பதற்காக ஏனிதிங் பட் அம்னோ (ஏபியு) இயக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்மீது தேச நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அலி அப்ட் ஜலில், முகநூலில் ‘Regimen Anarki’ என்ற தலைப்பில் பதிவிட்டிருந்ததற்காக சுமத்தப்பட்ட அக்குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஹ்மட் பைருஸ் முகம்மட் புஸி, ஒரு பிணையாளியின் உத்தரவாதம் மற்றும் ரிம5,000 பிணையில் அவரை விடுவித்தார்.
இவ்வுலகில் தவறிழைக்காத மனிதரே கிடையாது. அது மனித இயல்பு. அவ்வகையில் ஆட்சியாளர் சற்று தவறிழைத்திருக்கலாம். இதனை தட்டி கேட்பது குற்றமா? மக்கள் நினைத்தால்தான் உண்மையான, நீதியான ஒரு அரசு உருவாக முடியும். எதிர்கால தேர்தல்களில் எந்த கட்சி என்று பாராமல், அநீதிகளை தட்டிக் கேட்பவர்களை தேர்வு செய்யுங்கள்.