ஆறு மாதமாகிறது எம்எச் 370 காணாமல்போய்

mh 370மலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச்370, அதில் பயணித்த  239 பேருடன்  காணாமல்போய்  ஆறு  மாதங்கள்  ஆகின்றன. .

அதைத்  தேடிக்  கண்டுபிடிப்பதற்காக  பெரும்  பொருட்செலவில் மிகப்  பெரிய  தேடும்  தேடும்  பணி  மேற்கொள்ளப்பட்டது விமானப்  போக்குவரத்து  வரலாற்றிலேயே  செலவுமிக்க  தேடலாக அது  அமைந்தது. ஆனால்,  விமானத்தைப்  பற்றியும்  அதன் பயணிகள், பணியாளர்கள்  பற்றியும்  இதுவரை  கடுகளவு  தடயமும்  கிடைக்கவில்லை.

ஆனாலும் தேடும்பணி  நிற்கப்  போவதில்லை.

அந்த  விமானம்  கடைசி  நேரத்தில்  எந்தப் பாதையில்  சென்றிருக்கும்  என்பது  யாருக்கும்  தெரியாத  ஒன்று. என்றாலும், தெற்கு  இந்தியப்  பெருங்கடலுக்கு  உயரே  பறந்தபோது  ஆயிரம்  மார்க்கங்களில்  அது  பறந்திருக்கலாம்  என்று  அனுமானிக்கப்படுவதாக    ஆஸ்திரேலிய  போக்குவரத்து  பாதுகாப்புப்  பிரிவின்  தலைவர்  டோலன்  கூறியதாக  யுகே  செய்தித்தாளான  த  டெலிகிராப்  அறிவித்துள்ளது.

விமானத்தைத்  தேடும்பணி  இம்மாத  இறுதியில்  மீண்டும்  தொடங்கும்  என்று  கூறிய  டோலன், அது  எந்தெந்த  பாதைகளில்  பயணித்திருக்கும்  சாத்தியம்  உண்டோ  அந்தப்  பாதைகளில்  முதலில்  தேடப்படும்  என்றார்.