புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள என்ஜிஓ-வான பாஸ்மா நேற்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம் ஒன்றில் பேசிய பாஸ் மத்திய குழு உறுப்பினர் முஜாஹிட் யுசுப் ராவா, பாஸுக்கு அம்னோவுடன் ஒத்துழைக்கும் எண்ணம் கொஞ்சமும் இல்லை என்றார்.
“அம்னோவில் உள்ள சில தரப்புகள் பாஸைப் பிளவுபடுத்த முயல்வதை மறுப்பதற்கில்லை. அதே வேளை அம்னோவுடன் ஒத்துழைக்க முயலும் (பாஸ் உறுப்பினர்களின்) அரசியல் வாழ்க்கை நீடிப்பதில்லை என்பதைத்தான் வரலாறு காண்பிக்கிறது”, என்றாரவர்.
பாஸ்மா, பெரும்பாலும் பாஸ் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு என்ஜிஓ. பாஸ் கட்சி பக்கத்தான் ரக்யாட்டில் தொடர்ந்து இருப்பதை உறுதிப்படுத்துவதே அதன் நோக்கம்.
என்ன சார் பேசறாங்க இவங்க பகாதானில் தொடர்ந்து இருகுனுமா ஆனா வான் அவர்களை ஆதரிக்க மாட்டாங்கள என்ன விளையாடுறாங்கள …. வெளியேறுவதே மேல் …