டயானா: பிரதமர் என் தாயாரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்

dyanaசுயமாக  தெரிவுசெய்யும்  உரிமையைத்  தம்  தாயார், தனக்குக்  கொடுத்திருப்பதாகக்  கூறிய  பேராக்  டிஎபி  சோசலிச இளைஞர்  பிரிவு  செயல்குழு  உறுப்பினர்  டயானா  சோப்யா  முகம்மட்  டாவுட்,  அவரிடம் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பாடம்  படிக்க  வேண்டும்  என்றார்.

“பிள்ளைகள்  சுயமாக  சிந்திக்கவும், தீர்மானிக்கவும், குறைகூறவும்  சுதந்திரம்  கொடுத்த என் தாயாரிடமிருந்து  அவர்(பிரதமர்) கற்றுக்கொள்ள  வேண்டும்”, என டயானா  மலேசியாகினியிடம்  கூறினார்.

பெற்றோர்  பிள்ளைகளைக்  கட்டுப்படுத்தி வைத்திருக்க  வேண்டும்  என  நஜிப்  கூறியது, அவர் “காலத்துக்கு  ஒவ்வாத  சிந்தனைகளைக் கொண்டவர்”  என்பதைக்  காட்டுகிறது.

“உண்மையில், பிள்ளைகள்  சுயமாக  சிந்திப்பதை  ஊக்குவிக்க  வேண்டும்”, என்றாரவர்.

செப்டம்பர் 7-ல், பகாங்கில்  பேசிய  நஜிப், “அம்மாவும்  அப்பாவும்  அம்னோ  உறுப்பினர்கள். மகள்  டிஏபி-இல்  சேர்கிறார். எனவே, நம்  பிள்ளைகளை  அம்னோவைச்  சார்ந்தவர்களாக  வளர்க்க  வேண்டும்”, என்று  கூறியதாக  அறிவிக்கப்பட்டிருந்தது.