தேச நிந்தனைச் சட்டம் குறித்து கருத்துரைத்த சைபுடின்மீது அமைச்சர் பாய்ச்சல்

dahlanதேச நிந்தனைச் சட்டத்தை  எடுத்துவிட்டு  அதனிடத்தில்  தேசிய  ஒற்றுமை  ஆலோசனை  மன்றம்(என்யுசிசி)  பரிந்துரைத்திருக்கும்  தேசிய  நல்லிணக்கச் சட்டவரைவைக்  கொண்டுவரலாம்  என்ற  கருத்தை  முன்வைத்ததற்காக  முன்னாள்  உயர்கல்வி  துணை  அமைச்சர்  சைபுடின்  அப்துல்லா நன்றாக  ‘வாங்கிக்  கட்டிக்கொண்டிருக்கிறார்’.

அச்சட்டவரைவு  பற்றி  வெளிப்படையாகக்  கருத்துரைத்தன்வழி  சைபுடினும்  என்யுசிசி–யும்  வரம்பு  மீறி விட்டதாக  வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர்  அப்துல்  ரஹ்மான்  டஹ்லான்  சாடினார்.

“என்யுசிசி ஏதாவது  கருத்துரைப்பதாக  இருந்தால்  அதை  அரசாங்கத்திடம்தான்  தெரிவிக்க  வேண்டும். சைபுடின் என்யுசிசி-இன்  சட்டவரைவு  அறுதியானது  என்பதுபோல்  பேசுகிறார். அது  தவறு”, என அமைச்சர்  டிவிட்டரில்  பதிவிட்டிருக்கிறார்.