சுல்தானிடம் மன்னிப்பு கேட்டது டிஏபி

apologiseசிலாங்கூர்  மந்திரி  புசார்  பதவிக்கு  ஒரே  ஒரு பெயரை  மட்டுமே  பரிந்துரை  செய்ததற்காக  டிஏபி, சிலாங்கூர்  சுல்தானிடம் மன்னிப்பு  கேட்டுகொண்ட  டிஏபி  அரசமைப்புப்படியான  ஆட்சியாளருக்கு  தன்  விசுவாசத்தையும்  தெரிவித்துக் கொண்டது.

“சிலாங்கூர்  மந்திரி  புசார்  பதவிக்கு  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயிலின் பெயரை  மட்டுமே  சமர்ப்பிக்க  முடிவெடுத்து சுல்தானை  மனம்  வருந்தச்  செய்ததற்காக  டிஏபி  சார்பில்  மன்னிப்பு  கேட்கிறோம்”, என்று  டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்  ஓர்  அறிக்கையில்  கூறியிருந்தார்.

பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிமுடன்  ஆலோசனை  கலந்த  பின்னரே  வான்  அசிசாவின்  பெயரைப்  பரிந்துரைக்க  முடிவெடுக்கப்பட்டதாக  அவர்  கூறினார்.

“சுல்தானுக்குப்  பிளவுபடாத  விசுவாசத்தையும்  தெரிவித்துக்  கொள்கிறோம். சுல்தானின்  உத்தரவு பற்றி  அன்வாருடன்  கலந்து  பேசுவோம்”, என்றும்  அவர்  குறிப்பிட்டார்.