பட்டியலில் இல்லாத ஒருவரை சுல்தான் எம்பி ஆக நியமிக்கலாம்

salehudinசிலாங்கூர்  சுல்தான்  ஷராபுடின்  இட்ரிஸ்  ஷா,  மாநில  எம்பி  பதவிக்கு  பக்கத்தான்  ரக்யாட்  சமர்பித்துள்ள  பெயர்ப் பட்டியலில் இல்லாத  ஒருவரை  எம்பி-ஆக  நியமிக்க  முடியும். சட்டம்  அதற்கு  இடமளிக்கிறது  என  வழக்குரைஞர்  சலேஹுடின் சைடின்  கூறினார்.

அவர்  கூறியதை  இன்னொரு  மூத்த  வழக்குரைஞரும்  ஐநா  சிறப்புத்  தூதருமான  பரம்  குமரஸ்வாமியும் ஒப்புக்கொள்கிறார்.

பெயர்ப்  பட்டியலில்  இல்லாத  ஒருவரை  சுல்தான்  நியமித்து  அவருக்கு  மாநிலச்  சட்டமன்றத்தில்  பெரும்பான்மை  ஆதரவு  இல்லை   என்றால்  சுல்தான்  சட்டமன்றத்தைக்  கலைக்கலாம்  எனவும் பரம்  கூறினார்.

“மாநில அரசமைப்பில்  எந்த இடத்திலும்   பெயர்ப்பட்டியலில்  உள்ளவரைத்தான் சுல்தான் தேர்ந்தெடுக்க  வேண்டும்  என்ற  வரையறை  இல்லை”,  என  சாலேஹுடின் மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.