ஹாடி கட்சியின் சட்ட விதிகளை மீறிவிட்டார், லுஹாம் கூறுகிறது

 

Pas - hadi rappedசிலாங்கூர் மாநில மந்திரி புசார் விவகாரத்தில் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பாஸ் கட்சியின் சட்ட விதிகளை மீறி விட்டார் என்று அக்கட்சியின் சட்ட மற்றும் மனித உரிமைகள் பிரிவு (லுஹாம்) கூறுகிறது.

மத்திய குழுவின் முடிவை தள்ளி வைத்து தாமே முடிவெடுக்கும் “வீட்டோ” அதிகாரம் கட்சியின் தலைவருக்கு உண்டு என்ற ஷுரா மன்றம் விளக்கம் தவறானது என்றும் லுஹாம் கூறுகிறது.

“ஷுரா மன்றத்தின் ஆதரவுடன் ஹாடி பாஸ் கட்சியின் பிரதிநிதி ஒருவரை மந்திரி புசார் பதவிக்கு நியமித்தது மத்திய குழுவின் தீர்மானத்தை மீறியதாகும்.

“இதற்கு முன்னதாக, பாஸ் இப்பதவியைக் கோராது, ஏனென்றால் அது பிகேஆருக்கு சேர வேண்டியதாகும் என்று கட்சியின் தலைவரே கூறியுள்ளார்”, என்று லுஹாம் செயலாளர் அபாங் அஹமட் கார்டி அபாங் மாசாகுஸ் தெரிவித்தார்.