நம்புங்கள், ஜிஎஸ்டி சுமையாக இருக்காது, நஜிப்

 

gstஏப்ரல் 1, 2015 இல் அமலாக்கப்பட விருக்கும் ஜிஎஸ்டி என்ற பொருள்கள் மற்றும் சேவைகள் வரி முறை மலேசியர்களுக்கு சுமையாக இருக்காது என்று பிரதமர் நஜிப் உறுதியளித்துள்ளார்.

உலகின் 90 விழுக்காடு நாடுகளில் அமலாக்கப்பட்டிருக்கும் இந்த வரி முறை மலேசியாவின் தளராத மற்றும் தொடர்ந்த வளர்ச்சியை உறுதி செய்ய அமலாக்கப்பட்டேயாக வேண்டும் என்று அவர் கூறினார்.

அரசாங்கம் ஒன்றும் அவசரப்படவில்லை. 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்த வரியினால் மக்களும் நாடும் பயன் பெறும் என்று கண்டறியப்பட்டுள்ளது என்றார் நஜிப்.

“நம்புங்கள். நான் மக்களுக்கு சுமையைத் தர மாட்டேன். பாரிசான் நேசனலின் தலைவர் என்ற முறையில் நான் அவர்களுக்கு தொல்லைகள் தர மாட்டேன், ஏனென்றால் அரசாங்கம் மக்களால் ஆதரிக்கப்படுகிறது”, பிரதமர் நஜிப் நேற்ரு கூறினார்.