சிலாங்கூருக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான முன்மொழியப்பட்டுள்ள ரிம9.65 பில்லியன் மதிப்பிலான தண்ணீர் ஒப்பந்த நடவடிக்கை சட்டத்திற்கு முரணானதாக இருக்கலாம், ஏனென்றால் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் மாநிலத்தை ஆளுவதற்கான சட்டப்பூர்வமான தகுதி இல்லாதவராக இருக்கிறார் என்று டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ இன்று கூறினார்.
பேராக் நெருக்கடி 2009 இன் அடிப்படையில், சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறும் நிலையில் இல்லாத காலிட் மாநிலத்தை ஆளுவதற்கான சட்டப்பூர்வமான தகுதியை இழந்து விட்டார்.
“ஆகவே, காலிட்டின் இன்றையத் தகுதி ஓர் இடைக்காக மந்திரி புசாரின் தகுதியை விட பலவீனமானது”, என்று சந்தியாகோ இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
பேராக் மாநில ஆட்சிப் பறிப்பு விவகாரத்தில் பெடரல் நீதிமன்றம் 2010 ஆம் ஆண்டில் அளித்திருந்த தீர்ப்பை சுட்டிக் காட்டிய சந்தியாகோ, நாளை கையொப்பமிடவிருக்கும் தண்ணீர் மறுசீரமைப்பு நடவடிக்கை சட்ட விரோதமானதாக இருக்கலாம் என்று மத்திய அரசுக்கு சட்டத்துறை தலைவர் ஆலோசனை கூற வேண்டும் என்றார்.
தண்ணீர் ஒப்பந்தம் மட்டுமல்ல, சிலாங்கூர் மாநில சொத்துகள் சம்பந்தப்பட்ட எந்த ஒப்பந்தத்திலும் காலிட் இப்ராகிம் கையொப்பமிட முடியாது என்று அவர் மேலும் கூறினார்.
காலிட் இப்ராகிமுடன் ஒப்பந்தத்தில் ஈடுபடும் எந்த ஒரு மூன்றாம் தரப்பினரும் எதிர்கால சிலாங்கூர் அரசாங்கம் அது போன்ற ஒப்பந்தங்கள் அதனை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தாது என்ற நிலைப்பாடை எடுக்கக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சந்தியாகோ தெரிவித்தார்.
ஆனால், அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட தமக்கு அதிகாரம் இருக்கிறது என்றும், சந்தியாகோவுக்கு அந்த அளவுக்கு எதுவும் தெரியாது என்றும் காலிட் நேற்று கூறியுள்ளார்.
பிரதமரும், துணை பிரதமரும், வண்ணான் மாதிரி சட்டவிரோதத்தை அடித்து, துவைத்து, வெளுத்து “சட்டவிரோதத்தை ; சட்டத்திற்கு உட்பட்டது” என்று மாற்றி விடுவதில் வல்லவர்கள் என்பது தெரியாமல் அறிக்கை விடுகிறீர்கள்.
அம்னோ ஆட்சியில் இருக்கும்வரை சட்டம் என் கையில்தான்…நான் சொல்வதே சட்டம்.!!!! இதுதான் அம்னோ!!!!
அம்னோ, 57 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்து எல்லா சந்து பொந்துகளிலும் தம் ஆதரவாளர்களுக்கு வெட்டி சம்பளம் கொடுத்து வளர்த்து வருகிறது. அநீதியையும் நீதியாக காட்டும் வல்லமை கொண்டவர்கள்!!! இவர்கள் சொல்வதையே நீதி தேவதை கேட்க வேண்டுமென்பதே இந்நாட்டு சட்டம். நீதி வாழ்வது சாவதும் மக்கள் கையிலே!!!!
இது பழைய கதைதானே ,,இந்த காலித் தவளை இந்த மாதிரி படும் கேவலமா நடந்து கொள்வான் என்பதி சந்தேகம் இல்லை
போச்சிடா …கடைசியாக காலித் கேட்டவர் ஆகிவிட்டார்..பாவம் பயபுள்ளே, மக்கள் கூட்டனி கொடுத்த சிறந்த பரிசு ..
அடபாவிகளா..அன்வற்காக காளிட்டை பலி கொடுத்து விட்டார்கள் மக்கள் கூட்டனி மக்கைகள்..
போனால் போகுது! மக்களின் வரிப்பணம் தானே!
SHANTI ,நாங்க யார வேண்டுமானாலும் பலி கொடுப்போம் ,அநியாயம் செய்பரைக்கு ,நீ என்ன MIC கூஜா தொக்கி யா ,போயி BN நில நடக்கிற உழலை கவனி……………..
சாந்தி, நீர் மற்றும் மின்சாரம் ஒரு குறிபிட்ட அளவில், குறைந்த விலையில் தர பட்டு கொண்டிருக்கிறது செலங்கோரில் ! khalid அவர்கள் 8 பில்லியன் மதிப்புள்ள பிசினஸ் சில் , மதிய அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டு , பக்காதான் தலைவர்களுக்கு தெரியாமல் உடன்பாட்டில் ஈடு பட்டுகொண்டிருக்கிறார் ! இதை காப்பற்ற தான் இவ்வளவு போராட்டம் ! இது அரங்கேறினால் , இரண்டு மடங்காக கட்டணம் உயரலாம் !
சரி ..அன்வர் துணைவி ஆட்சி செய்யட்டும்..
“பக்காதான் தலைவர்களுக்கு தெரியாமல் உடன்பாட்டில் ஈடு பட்டுகொண்டிருக்கிறார்” இது சற்று வேடிக்கையாக இருக்கிறது.
ஒரு மாநில MB எல்லா வேலைகளையும், தனிசையாகவே செயல் படுத்தும் அதிகாரம் உண்டு என்பதை கூட புரியாத சாந்தி .. எப்படி உங்களை கரை ஏத்துவது என்ற எனக்கு புரியவில்லை !
என்னை கரை ஏத்துவது இருக்கட்டும்..இன்னும் கொஞ்சே நாளில் எதிர்க்கட்சி கரை சேராமல் போக போகிறது..கொஞ்சம் அதை கவனியுங்கள்..
முதலில் இந்த பக்காதான் எப்படி ஆட்சி செய்யும் என்று கேலி செய்தீர்கள் …. நாங்கள் ….. எவ்வளவோ போராடி , மக்களுக்கு RM 20 வெள்ளி இலவச தண்ணீர் மற்றும் RM 20 வெள்ளி இலவச மின்சாரம் தருகிறோம் … உங்கள் குடும்பத்துக்கும் சேர்த்து … ஒரு மாதம் RM 40 என்றால் , 5 ஆண்டுகளில் RM 2400 . உங்களுக்கு , உங்கள் குடும்பத்துக்கு , உங்கள் உறவினர்களுக்கு , உங்கள் வம்சா வழியினருக்கு , செலங்கோரில் இவ்வளவு உதவுகிறோம் ! ஆனால் உங்கள் ஆட்சியில் rm 500 கொடுத்து இபொழுது GTS வருகிறது …. இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே … எவரை எவர் வெள்ளுவாரோ ? எவரை எவர் வெள்ளுவாரோ ? பயணம் பயணம் பயணம் … MSV அவர்களின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது ….
எனது யூகம் TSK ( காலிட்) மாஸ்.. (MAS AIR ) தலைமை தாங்க..சரியான நபர்…இவர் தன் தனி திறமை யை இங்கு கட்டலாம்
TSK மாஸ் புனரமைப்பு தலைவர் என்பது சற்றுமுன் கிடைத்த புருட தகவல் அவர் SPAN நீர் நிருவாக பொருபேட்பர்..என்று பட்சி சொல்லுது