பாலர்பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் கே.பத்மநாதன் என்ற முகமட் ரித்துவான் அப்துல்லாவை கைது செய்து குழந்தை பிரசன்னா டிக்சாவை மீட்டு தாயாரிடம் ஒப்படைக்க ஈப்போ உயர்நீதிமன்றம் இன்று போலீஸ் படை தலைவர் காலிட் அபு பாக்காருக்கு உத்தர விட்டுள்ளது.
ஐஜிபி நடவடிக்கை எடுக்க அவரை கட்டாயப்படுத்தும் மெண்டாமஸ் என்ற உத்தரவை உயர்நீதிமன்ற நீதிபதி லீ ஸ்வி செங் வழங்கினார்.
“இந்த மெண்டாமஸ் உத்தரவுடன் அரசின் வளங்களை ஐஜிபி பயன்படுத்த முடியும் என்பதால், இந்திரா தமது குழந்தையை மலேசியா தினமான செவ்வாய்க்கிழமைக்கும் முன்னதாக காண இயலும் என நம்பப்படுகிறது”, என்று நீதிபதி லீ கூறினார்.
சட்டத்தை அமல்படுத்தும் தலைமை அதிகாரி என்ற முறையில் ஐஜிபி அவரது கடமையை நியாயமாகவும், உறுதியாகவும், நடுநிலை தவறாமலும் ஆற்றுவார், நாம் மலேசிய தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் நமது நாட்டில் சட்ட ஆளுமை மேலோங்கி இருக்கிறது என்பதையும் நாம் உறுதிப்படுத்தலாம், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் எவரும் இல்லை, மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் நீதிமன்றம் வீணாக செயல்படாது, என்ற எதிர்பார்ப்புகளை மக்கள் கொண்டிருக்கின்றனர்”, என்று நீதிபதி கூறினார்.
மூத்த அரசாங்க வழக்குரைஞர் ஹிசாம் இஸ்மாயில் இந்தத் தீர்ப்பை நிறுத்தி வைப்பதற்கான தடை உத்தரவுக்கு தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி நிராகரித்தார்.
எத்தனை தரம்தான் உத்தரவு பிறப்பிப்பது..?!
ஒரு வேளை அவர் வெளி நாட்டுக்கு ஓடி விட்டார் என்று ஜாக்கிம் கதை விட்டால் நீங்க என்னா பண்ணுவீங்க….சார்! எங்களுக்கா கதை விட தெரியாது!
கோளாறுகள் இடையிலும் ஒரு நல்ல நீதியரசரும் இருக்கிறாரே!!!
என்ன ஆச்சர்யம் ??? வாழ்க, வாழ்க அவர் பன்னெடுங்காலம்..
இதை எல்லாம் பார்த்தும் நம்மவர்களுக்கு சூடு சொரணை இல்லையே –மீண்டும் மீண்டும் சாராயத்திற்கும் பிரியாணிக்கும் தங்களையும் தங்களின் வரும் காலத்தையும் அடகு வைக்கும் நம்மவர்களை என்ன சொல்வது?
எல்லா உத்தரவுகளும் செவிடன் காதில் ஊதிய சங்காகிவிடுமோ?
சாந்தி, ஒரு தனித்து வாழும் தாய்மாருக்கு, அவர் குழந்தையை அவரிடம் ஒப்படைக்க நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது ! ஆனால் அவர் படும் பாட்டை பார்த்திர்கள ? உங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லையா ? உங்களுக்கு தாய்மை உணர்வு இல்லையா ? எனக்கே வருத்தம் தாங்க முடிய வில்லை ? யார் ஆட்சியில் இது நடக்கிறது ? சாந்தி … எங்கே இருக்கிறிர்கள் ? இதற்கும் அன்வார் தான் காரணமா ? பகாடான் சிரிப்பாய் சிரிக்குதா ? அதே அரைத்த மாவைத்தான் அரைபீர்கள ?
குல அவர்களுக்கு என் தனிபட்ட பாராட்டுக்கள் !
நீதிமன்றத்தின் உத்தரவை “IGP” பின்பற்றுவார் என்று காத்திருக்கும் காலங்களில், அனைத்து நீதிபதிகளும் ஒன்றுகூடி, நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து சிறையில் தண்டனைகளை அனுபிவித்து கொண்டிருக்கும் அனைத்து கைதிகளையும் விடுதலை செய்வது பற்றி முன்கூட்டியே விவாதித்தால், “IGP” நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்ற தவறும் பட்சத்தில், காலம் தாழ்த்தாமல் உடனே அனைத்து கைதிகளையும் விடுதலை செய்து, இந்த COWBOY அரசாங்கத்திற்கு நீதிமன்றம் புத்தி புகட்ட வேண்டும்.