குறை கூறுவதாக இருந்தாலும், அம்னோவை “போடோ” என்று திட்டாதீர், ஸாம் சாடப்பட்டார்

 

Zainuddin-umno stupid1அம்னோவின் முன்னாள் தகவல் அமைச்சர் ஸைனுடின் மைடின் (ஸாம்) அம்னோவை ஏளனமாக “போடோ” என்று கூறியிருப்பதற்கு ஓர் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

கூட்டரசுப் பிரதேச அம்னோ இளைஞர் பிரிவின் தலைவர் முகமட் ராஸ்லான் முகம்மட் ராபி “அம்னோ” மற்றும் “முட்டாள்” என்ற இரு சொற்களையும் ஒன்றுபடுத்த முடியாது என்றார்.

ஸாம் எந்த கருத்தை வெளிப்படுத்த எண்ணியிருந்தாலும், அந்தச் சொல் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்றாரவர்.

“அம்னோ முட்டாளாக இருந்தால், அது இந்நாட்டை இன்று வரையில் ஆண்டிருக்க முடியாது”,Zainuddin-umno stupid2 என்று அவர் மேலும் கூறினார்.

பிரதமர் நஜிப்பை வசைபாடிய ஸாம், அம்னோ மற்றும் இதர வலதுசாரியினரை “முட்டாள்” மற்றும் “தீவிரவாதி” என்றும் வர்ணித்தார்.

தேசநிந்தனைச் சட்டம் போன்ற கொடூரச் சட்டங்களை நிலைநிறுத்த வேண்டும் என்ற இடதுசாரியினர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில் நஜிப் தயக்கம் காட்டுவதால் ஸாம் மனக்கலக்கம் அடைந்துள்ளார்.

ஆனால், ஸாம் கூறியுள்ள கருத்து அவர் முதிர்ச்சியடையாதவர் என்பதைக் காட்டுகிறது என்றார் முகமட் ராஸ்லான்.

இந்த முகமட் ராஸ்லான் டிஎபி தலைமையகத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்தி அக்கட்டடத்தை தீயிட்டு கொளுத்தப் போவதாக மிரட்டல் விட்டதன் வழி பிரபல்யமானவர்.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டார், ஆனால் குற்றம் சாட்டப்படவில்லை.