எம்எச்370 குறித்த இந்தோனேசிய ஊடக அறிக்கை ஐஜிபியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

 

IGP to goமார்ச் 8 இல் மலேசியன் ஏர்லைன்ஸ் (மாஸ்) பயணம் எம்எச்370 மாயமாக மறைந்து போனது பற்றி போலீசுக்கு தெரியும் என்று கூறும் இந்தோனேசிய ஊடக அறிக்கைகளை மலேசிய போலீஸ் மறுத்துள்ளது.

அம்மாதிரியான ஊடக அறிக்கைகளால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக மலேசிய போலீஸ் படையின் தலைவர் காலிட் அபு பாக்கார் பெர்னாமாவிடம் கூறினார். ஏனென்றால் மலேசிய போலீசிடம் காணமல் போன பயணம் எம்எச்370 பற்றிய தகவல் எதுவும் கிடையாது என்றாரவர்.

“எந்த ஊடகம் எப்போது அவ்வாறான அறிக்கையை வெளியிட்டது என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்! நான் எனது எதிரிணை இந்தோனேசிய போலீஸ் படை தலைவரிடம் அவர் இப்பிரச்சனை குறித்து ஏதேனும் கூறியுள்ளாரா என்று கேட்கப் போகிறேன்.

“அது போன்ற அறிக்கை குறித்து எனக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை”, என்றார் காலிட்.

நேற்று, இந்தோனேசிய போலீஸ் படை தலைவர் சுதர்மன், காபோல்ரிக்கும் (இந்தோனேசிய போலீஸ் படை) மலேசிய போலீஸ்சுக்கும் எம்எச்370 காணமல் போனதற்கான காரணம் தெரியும் என்று கூறியதாக அவரை மேற்கோள் காட்டி இந்தோனேசிய ஓன்லைன் இணையதளம் (Tempo.com) செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் மேலும் விவரிக்கவில்லை.

ஹமிடி, எனக்கும் தெரியாது

மலேசிய உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி, இந்தோனேசிய போலீஸ்சுக்கும் மலேசிய போலீஸ்சுக்கும் மார்ச் 8 இல் Hamidiமாஸ் பயணம் எம்எச்370 காணாமல் போனதற்கான காரணம் தெரியும் என்ற இந்தோனேசிய ஊடக அறிக்கை பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றார்.

அவ்விவகாரம் குறித்து மேற்கொண்டு எதுவும் கூற ஹமிடி மறுத்து விட்டார்.

“அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது”, என்று அவர் பத்து கவான் அம்னோ தொகுதி பேராளர்கள் கூட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.