அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புக் குரல்களை நசுக்குவதற்காக அரசாங்கம் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் கட்டவிழ்த்து விட்டுள்ள கடும் நடவடிக்கைகள் பிரதமர் நஜிப்பின் உண்மையான சர்வாதிகார மனப்பாங்கை வெட்ட வெளிச்சமாக்கி விட்டது என்று மனித உரிமைகள் உன்னிப்பு ஆசியப் பகுதி துணை இயக்குனர் பில் ரோபர்ட்சன் இன்று விடுத்துள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார்.
“சுயேட்சையான கருத்து தெரிவித்தலுக்கு எதிராக பிரதமர் நஜிப் மேற்கொண்டிருக்கும் கடும் நடவடிக்கைகள் அவரது உரிமைகளைப் பறிக்கும் உண்மையான பண்பைக் காட்டி விட்டது”, அவர் மேலும் கூறுகிறார்.
“தெளிவற்ற குற்றங்களை” தடை செய்யும் அந்த தேச நிந்தனைச் சட்டம் இப்போது நஜிப் அரசாங்கத்தை குறைகூறுபவர்களை நொருக்குவதற்கான ஒரு வசதியான ஆயுதமாகியுள்ளது என்றாரவர்.
“தங்களுவைய கருத்துகளைத் தெரிவித்ததற்காக ஆர்வலர்களையும் எதிரணித் தலைவர்களையும் சிறையில் அடைப்பது ஆதிக்க ஆட்சிக்கு இட்டுச் செல்லும் நிலையற்ற வழியாகும் என்பதை நஜிப் உணர வேண்டும்”, என்று ரோபர்ட்ஸன் சுட்டிக் காட்டினார்.
மலேசியாகினியின் செய்தியாளர் சூசன் லூன் மீது இச்சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் அவர் குறிப்பிட்டார். பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போ கூறியதை அவர் வெளியிட்டார்.
13 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பு பிரதமர் நஜிப் இந்த தேச நிந்தனைச் சட்டத்தை அகற்றப் போவதாக அளித்திருந்த வாக்குறுதியை ரோபர்ட்ஸன் அவருக்கு நினைவுறுத்தினார்.
பின்னடைவுகள் இருந்தும் தேர்தலில் பாரிசான் வெற்றி பெற்றது. ஆனால், பிரதமர் நஜிப் அவர் கொடுத்திருந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியுள்ளார் என்பதை சுட்டிக் காட்டிய ரோபர்ட்ஸன், அரசியல் நோக்கங்களுக்காக பேச்சுரிமைக்கு முரணாக மக்களுக்கு எதிராக வழக்குத் தொடர தொடர்ந்து பயன்படுத்தப்படும் இச்சட்டத்தை நஜிப் அகற்ற வேண்டும்”, என்று அவர் கேட்டுக் கொண்டார்.
போச்சிடா…
எல்லா சட்டத்தையும் அகற்றி விடுவோம் பிறகு நாம் எல்லாரும் சுதந்திரமாக பேசலாம் வாருங்கள்..
முடிந்த தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில் நமகெல்லாம் வாக்குறிதிகளை அள்ளி விட்டுகொண்டிருந்தான்.அதையும் நம் மட ஜென்மங்கள் நம்பி அவனை தூக்கி வைத்தனர். முடிவில்?நமக்கு நாமம்- ஏன் நம்மவர்கள் இவ்வளவு முட்டாள்களா? 57 ஆண்டுகள் ஒன்றும் செய்யாதவன் கள் இப்போதா செய்ய போறான் கள்? புத்தி
வேண்டாமா?
நான் ஒரு “டுபாக்கூர் தலைவர்” என்பதை இவரது ஆட்சியில் இவரே பலமுறை நிருபித்து உள்ளார். இனிவரும் காலங்களில் “JANJI TIDAK DIDAPATI” என்று இவரது கூவலை எடுத்து கொள்ளலாம்.
“MELAYU MALAS” / “MELAYU MALU TADAA” என்று மாமா மகாதீர் இஸ்கந்தர் குட்டி கூறியது இவரையும் சேர்த்துதான என்பது தெரிந்தும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத “கோழை டுபாக்கூர் தலைவர்”.
உங்கள் அரசியலின் அஸ்தமானம் ஆரம்பம் ஆகி, நாட்கள் என்ன படுகின்றன என்பதை அறியாமல் திருட்டு புன்னகை புரிகிறாயா ???
தான் சொன்னதையே செய்ய முடியல ….. இதுல அடுத்தவன்: “சொன்னதை செய்ய மாட்டான்!” என்கிறதாம் பட்சோந்தி……
போகப் போகத் தெரியும், இந்த நசி ‘பூ’வின் நாத்தம் புரியும்.
இணையதளங்களில் அறிக்கைகள் விடுவோர் மட்டுமல்லாமல், ‘டுவிட்டர்களில்’ கருத்துக்களை பதிவு செய்வோர் மீதும் தற்போது தேச நிந்தனை சட்டம் பாய்கிறது. கூடிய விரைவில் நம்மை போன்று கருத்து சொல்வோர் மீதும் இச்சட்டம் பாயலாம். ஆகவே, கவனமுடன் கருத்துக் கூறுங்கள். நம் நாடு,’தேமோகரசி’ என்கிற பாதையை விட்டு, ‘DIA MAHU KERUSI ‘கோட்பாட்டை நோக்கி பீடு நடை போடுகிறது.
நஜிப்பின் உண்மையான குணம் வெளிச்சத்திற்கு வந்து விட்டது // நல்லவேளை எதிர் கட்சிக்காரன் சொல்லவில்லை !சொல்லியிருந்தால் ஜெயிலும் தையிலும் நிச்சயம் !
இவர் உண்மையிலேயே நாட்டை ஆள தகுதியில்லா மனிதன்தான் உண்மையை ஆதரிக்கிரீன்