கிளந்தானிலுள்ள சயாமிய சமூகத்தினர் அமைத்திருக்கும் 16 பள்ளிகளுக்கு உதவ மலேசிய அரசாங்கம் ரிம200,000 வழங்கும்.
இந்த நிதி உதவியை இன்று கம்போங் ஜுபாகாரில் துணைப் பிரதமர் முகைதின் யாசின் அறிவித்தார். அச்சமூகத்திற்கு நிதி உதவி 2012 இல் நிறுத்தப்பட்டது. அதற்குப் பின்னர் இப்போது நிதி உதவி கொடுக்கப்படுகிறது என்றாரவர்.
ஆனால், மாநில மேம்பாடு குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது முகைதின் வெடுக்கென்று பதில் அளித்தார்: “மேம்பாடு? மாநில அரசை கேளுங்கள்”.
இருப்பினும், முக்கிம் சிம்பாங்கான் ஹிலிர் மசூதியை மேம்படுத்த ரிம500,000 கொடுக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
தாய்-மொழி ஆசிரியர்களை கொண்டு வர உதவுவோம்
பெங்காலான் குபோரில் பேசிய முகைதின் யாசின் சாயாமிய சமூகத்தினருக்கு அளிக்கப்பட்ட நிதி உதவி கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கும் தாய்மொழியை புரிந்து கொள்வதற்கும் ஆகும் என்றார்.
“அவர்களுக்கு தாய்-மொழி (சயாமிய மொழி) போதிக்கும் ஆசிரியர்கள் தேவை போன்ற உதவிதள் வேண்டுமென்றால், நாங்கள் அதற்கான ஏற்பாடு செய்ய உதவ முடியும். அது எங்களுக்கு ஒரு பிரச்சனை அல்ல ஏனென்றால் அது எனது பொறுப்பாகும்.
“நமது குழந்தைகள் கல்வி அறிவற்றவர்களாக இருப்பதை நான் விரும்பவில்லை, ஏனென்றால் கல்வி அறிவில்லாமல் அவர்களால் வாழக்கையில் முன்னேற முடியாது. அது நாட்டிற்கு பிரச்சனையாகி விடும்”, என்று முகைதின் கூறினார்.
இன்று வரலாற்றுப்பூர்வமான நாள்
தாய்-மொழி பள்ளி வாரியத் தலைவர் போன் ஏ கீ அரசாங்கம் அளித்துள்ள உதவிக்கு நன்றியுடையவராக இருப்பதாகக் கூறினார்.
“இன்று வரலாற்றுப்பூர்வமான நாள். துணைப் பிரதமர் நமது கோயிலுக்கு (வாட்) வருகையளித்து நமக்கு ரிம200,000 மதிப்புள்ள நிதி உதவி அளித்துள்ளார்.
“அந்நிதி 16 சயாமியப் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வி போதிப்பதற்கு பயன்படுத்தப்படும். அதில் 70 தன்னார்வலர்களும் 800 சயாமிய மாணவர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்”, என்று போன் கூறினார்.
பெங்காலான் குபோர் தொகுதியின் மொத்த 24,039 வாக்காளர்களில் 6.81 விழுக்காட்டினர் சயாமிய சமூகத்தினராவர்.
பெங்காலான் குபோர் மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகியவற்றுக்கிடையிலான ஓர் எல்லைப்புற நகராகும்.
மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் ஏற்பட வேண்டுமென்றால், ஒவ்வொரு தொகுதியிலும் இடைத்தேர்தல்கள் வரவேண்டும். ஆண்டவனை பிரார்த்திப்போம்.
எல்லாம் ஓட்டு லஞ்சம் ……!
இடை தேர்தல் வந்தால் BN னின் வாக்குறுதிகl பஞ்சm இருக்காத்u !
ஊருக்கும் வெட்கமில்லை…உறவுக்கும் வெட்கமில்லை… கொடுப்பவனுக்கும் இல்லை…எடுப்பவனுக்கும் அது இல்லை…பாவம் அவர்களும் நம்மைப் போலத்தானோ? ‘அவர்கள்’ மென்று துப்பிப் போடும் எலும்புத்துண்டுகளை ‘லபக்’ என்று கவ்விக் கொள்வதில் அவர்களும் நம்மைப் போலத்தானோ..“அவர்களுக்கு தாய்-மொழி (சயாமிய மொழி) போதிக்கும் ஆசிரியர்கள் தேவை போன்ற உதவிதள் வேண்டுமென்றால், நாங்கள் அதற்கான ஏற்பாடு செய்ய உதவ முடியும். அது எங்களுக்கு ஒரு பிரச்சனை அல்ல ஏனென்றால் அது எனது பொறுப்பாகும். இந்தப் பொறுப்பு இத்தனை நாள் எங்கே போயிருந்தது? 2012-இல் நிறுத்தப்பட்டதை இப்போது மீண்டும் துவக்க காரணம் என்ன.இந்த இடைத்தேர்தல் தானே? மக்களே புரிந்து கொள்ளுங்கள்.இந்த இடைத்தேர்தல் வரவில்லை என்றால் இந்த ‘சயாம் சமூகம்’ ஓரம் கட்டப்பட்ட சமூகம் தான். இதைச் சொல்ல எனக்கும் கூட வெட்கமில்லை. கடவுளே…இன்னும் அதிகமான இடைத்தேர்தல்களுக்கு வழி செய்வாயாக..! பத்துமலைப் படிகளை பத்து முறை ஏறி இறங்குகிறேன்..
மலேசிய கல்வியை சாக்கடையாக்கியது போதாதென்று சாயாமிய தாய் மொழியை சாக்கடையாக்க முனைவதுபோல் தெரிகிறது.
இது வேலையில்லாத அம்பட்டன் எதையோ பிடுச்சு செரைச்சானம் கதை.
நம்முடைய கல்வி அமைச்சரை இது போன்ற இடங்களில் காண முடிவதில்லையே ..
நம் கல்வி அமைச்சன் எப்ப resign பண்ணப்போரனு என் ரோச்மாஹ் காத்து கிட்டிருக்கா
ஆடு நனைகிறதே என்று ஓநாய் ஓன்று அழுகிறது.
எல்லாம் மலாய்க்காரன் மாயம் ஆக்குவதற்கு தேசிய மொழி என்ற போர்வையில் ஆங்கிலத்தை கீழே தள்ளி விட்டு மலாய் மொழியை மேலே தூக்கி வைத்து தேர்வு இல்லாமலேயே மலாய்காரன் கள் எல்லா வேலைகளிலும் பொறுப்புகளிலும் தகுதி திறமை இல்லாமல் உட்கார்ந்து நம் தலையில் மிளகாய் அரைத்து கண்களிலும் தூவி விட்டுக்கொண்டிருக்கிறான் MIC எட்டப்பன்களின் ஆதரவுடன்.
இடைத் தேர்தல்கள் வர வேண்டுமென்றால் எதுவுக்கும் உதாவத சட்டமன்ற உறுப்பினர்கள் சீக்கிரம் “போய் சேர” அனைவரும் சேர்ந்து கடவுளுக்குக் கோரிக்கை வைப்போம்!
சிங்கப்பூரின் கல்வி திட்டமே மிக பொருந்தும்- ஆங்கிலம் முன்புபோல் போதனா மொழியாகவும் மற்றவை ஆறு வரை தாய் மொழியிலும் இருந்தால் இந்நாட்டு கல்வித்தரம் இவ்வளவு மோசமாக ஆகிருக்காது . அத்துடன் இன வெறியும் இவ்வளவு மோசமாக ஆகி இருக்காது. மேலும் சிந்திக்கும் திறமையும் சம தர்மத்திற்கும் வழி கோலிருக்கும்.