தொழிலாளர்கள் வேலை செய்வதற்கு தகுதியற்ற உலக நாடுகளில் மிக மோசமான நாடுகளின் பட்டியலில் மலேசியா இடம் பெற்றிருக்கிறது. அனைத்துலக தொழிற்சங்க சம்மேளனம் (ஐடியுசி) வெளியிட்டுள்ள உலக உரிமைகள் குறியீடுகள் இதனைக் காட்டுகின்றன.
ஓராண்டு கால ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 139 நாடுகளில் தொழிலாளர்கள் அவர்களுடைய உரிமைகளைப் பயன்படுத்துவதில் மலேசியா அதன் அண்டைநாடுகளாக இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றைவிட பின்தங்கியுள்ளது.
1 லிருந்து 5+ வரையிலான மதிப்பீடு தரவரிசை முறையில், மலேசியா 5 என்று தரம்பிரிக்கப்பட்டுள்ளது. 5+ தரவரிசை தொழிலாளர்களுக்கு எவ்வித உரிமையும் அற்ற போரினால் சீரழிந்து போன நாடுகளுக்கு உரியதாகும். அவற்றில் சோமாலியா மற்றும் பாலஸ்தீனம் போன்றவை அடங்கும்.
ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நாடுகளில் அந்நாடுகளில் பின்பற்றப்படும் சமுதாய சட்டத்துக்குட்பட்ட தன்னுரிமைகள், தொழிற்சங்கள் அமைத்தல், அவற்றில் சேர்தல், அவற்றின் நடவடிக்கைகளில் பங்கேற்றல், கூட்டுப்பேரம் பேசுதல் மற்றும் வேலைநிறுத்தம் செய்தல் ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் தரவரிசை நிர்ணயிப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட குறியீடுகளில் அடங்கும்.
இந்நாட்டில் பிறந்தவர்களுக்கு மலேசிய குடியுரிமை இல்லை ஆனால் கள்ளக்ககுடியேறிகளுக்கு “FELDA” தோட்டங்களில் வேலையும், மலாய்க்கார விதவைகளை ருமணம் செய்து வைத்து, மலேசிய குடியுரிமையும் கொடுத்து வாழ வைக்கும் மலேசியாவை “தொழிலாளர்கள் உரிமைகள்: மோசமான நாடுகள் பட்டியலில் மலேசியா” வை இடம் பெற வைத்த ஐடியுசி-யின் செய்கை வருத்தமளிக்கிறது.
எல்லாம் காகாதிரின் ஆசியுடன் 80 களிலேயே ஆரம்பிக்கப்பட்டு இன்று முழு மூச்சுடன் கண்ணுக்கு முன்னாலேயே நடைபெறுகிறது. இன்னும் எவ்வளவோ,
நம் நாட்டில் தொழிலாளர்களை கவனிப்போர் இல்லை. அரசியல் கட்சிகளில் PSM கட்சியை தவிர்த்து வேறு எந்த கட்சியும் பொருட்படுத்துவதில்லை. இதற்க்கு மற்றோர் காரணமும் உண்டு. நம் நாட்டில் உள்ள பாதிக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வெளிநாட்டவர் என்பதால், அவர்கள் மீது யாரும் அக்கறை கொள்வதில்லை.
சிங்கம் சொல்வது நூற்றுக்கு நுறு உண்மை.
மலேசியாவின் முக்கிய ஆளுங்கட்சி umno ஆரம்ப காலம் தொட்டே தொழிற்சங்க எதிர்ப்புப் போக்கைக் கடைபிடித்துள்ளது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் ஆரம்ப காலங்களில் தொழிற்சங்கங்கள் இந்தியர் கட்டுப்பாட்டில் இருந்தன. மற்ற காரணிகளும் உள்ளன. உம்: umno எந்த காலத்திலும் மனித உரிமைகளுக்கு முக்கியத்த்துவம் கொடுத்ததில்லை.. இன்றுள்ள umnob கொள்கையும் அதுவே. 1980களில் இருந்து தொழிற்சங்க விரோதப்போக்கு மேலும் தீவிரமாகியது. இனம், மதம், மொழி போன்றவற்றின் வழி சுரண்டலில் அவர்களின் முழு கவனமும் இருப்பதால் தொழிலார்கள் பெரும்பாலும் “அனாதைகள்” நிலையில் உள்ளனர். மனிதசக்தி அமைச்சின் அமைச்சர்களும் முதலாளிகள் சார்புநிலை கொண்டவர்களாக இருப்பதும் தொழிலாளர்களுக்குப் பாதிப்பை உண்டாக்குகிறது. ILOவில் உறுப்பியம் பெற்று இருந்தாலும் மலேசியா அதன் எல்லா கோட்பாடுகளையும் முழுமையாகக் கடைபிடிப்பதில்லை. ஐநாவின் மனித உரிமைகள் கோட்பாட்டிற்கும் அதே கதிதான். அனைத்துலக அரங்குகளில் பேச வாய்ப்பு கிடைத்தால் மட்டும் வாய் கிழியப் பேசும் நமது அரசு. இரட்டை வேட நடிப்பு மன்னன்.