நான்கு அரசிகள் ஆச்சேயை ஆண்டிருக்கின்றனர் என்ற அடிப்படையில் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஸிசா சிலாங்கூர் மாநில மந்திரி புசாராக நியமிக்கப்பட வேண்டும் என்று ஏழு இஸ்லாமிய அரசு சார்பற்ற அமைப்புகள் கூறின.
அந்த ஏழு அமைப்புகளின் சார்பில் பேசிய செஸ்மேக்ஸ் இயக்குனர் முகமட் நூர் மானுடி ஆச்சே இஸ்லாமிய அரசாங்கத்தை நான்கு அரசிகள் ஒருவர் பின் ஒருவராக 1641 க்கும் 1689 க்குமிடையில் ஆண்டுள்ளனர் என்று கூறினார்.
அரசி சோபியாதுடின் (1641-1675), அரசி நாகியாதுடின் (1675-1678); அரசி ஸாக்கியாதுடின் (1678-1688) மற்றும் அரசி கமலாட் சியா (1688-1689) ஆகியோரே அந்த நால்வரும்.
“இந்த நான்கு பெண் ஆட்சியாளர்கள் 59 ஆண்டுகளுக்கு ஆச்சேயை ஆண்டுள்ளனர். அவர்கள் நியாயமாக ஆட்சி செய்ததோடு மக்களின் நலன்களுக்கு ஆனவற்றை செய்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது”, என்று அவர் இன்று ஷா அலாமில் செய்தியாளர்களிடம் கூறினார்.
இது புதிய தகவல். மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது.
நம்ப வீட்டுக்குப் பக்கத்தில், வடக்கிலே இங்லாக்கும் தெற்கிலே மகளிரான மேகாவதியும் pM ஆகவும் அதிபர் ஆகவும் இருந்துள்ளனர். இங்கு ஒரு மாநில எம்பீ ஆக ஒரு மகளிர் வருவதற்கு என்ன2 எதிர்மறை சிந்தனைகள், காரணா காரியங்கள்?!
பெண்களை மாநில மந்திரி புசாராகவோ அல்லது நாட்டின் பிரதமராகவோ ஆவதற்கு இடம் கொடுத்து விட்டால், தமது இமாலாய ஊழல் வரலாறுகளை, எக்காலத்திலும் மக்கள் மறக்க முடியாதபடி மலேசிய வரலாற்றில் இடம் பெற செய்து விடுவார்களோ என்ற பயம் “UMNOPUTRA” -களுக்கும, எதற்கெடுத்தாலும் சமயத்தை காரணம் காட்டி பெண்களை அடிமையாக வைத்திருக்க நினைக்கும் போலி மதவாதிகளுக்கும் பயம் ஏற்படுவது நியாயம்தானே !!!
அப்போதைய இஸ்லாமிய அரசாங்கம் என்பது வேறு, இப்போதைய இஸ்லாமிய அரசாங்கம் என்பது வேறு. இப்போது ஊழல் தான் கண் முன் நிற்கிறது!