வழக்குரைஞர் எட்மண்ட் போனை பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்கள் அவர்களது கட்சிக்காரர் எட்மண்ட் ஒரு குற்றவாளியாக சந்தேகிக்கப்படுபவரா அல்லது சாட்சியா என்று அவருக்கு எதிராக தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொண்டுள்ள போலீசாரை கேட்டுள்ளனர்.
போன் சந்தேகிக்கப்படுபவர் என்றால், அவருக்கு எதிராகச் செய்யப்பட்டுள்ள ஐந்து போலீஸ் புகார்களை அவரிடம் தர வேண்டும் என்று போனை பிரதிநிதிக்கும் போன் எசோசியேட்ஸ் (Bon Associates) நிறுவனம் கூறிற்று.
போலீஸ் புலன்விசாரணை அதிகாரிக்கு செப்டெம்பர் 17 ஆம் தேதியிட்டு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் போன் ஒரு சந்தேகிக்கப்படுபவர் என்றால் அந்த ஐந்து புகார்களையும், அந்தப் புகாரின் அடிப்படை அல்லது உள்ளடக்கம் ஆகியவற்றை தங்களிடம் தர வேண்டும் என்று அக்கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அந்த புகாரில் தேச நிந்தனையானவை என்று கூறப்படும் சொற்களையும் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இக்கடிதத்தை மலேசியாகினி பார்த்துள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை காலை மணி 10.00 லிருந்து பிற்பகல் மணி 1.30 க்கு இடையில் பந்தாய் பிசினஸ் பார்க்கிலிருக்கும் அவரது அலுவலகத்தில் போலீஸ் தமது வாக்குமூலத்தை பதிவு செய்யலாம் என்று போன் போலீசுக்கு தெரிவித்துள்ளார்.