மந்திரி புசார் பதவிக்கு ஒரு பெயரை மட்டுமே அரண்மனையிடம் தாக்கல் செய்வது நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து பின்பற்றப்படும் ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பிரதாயம் என்ற கூறுவதை அரண்மனை நிராகரித்துள்ளது.
தவறான மற்றும் மக்களைக் குழப்பும் அறிக்கைகளை வெளியிடுவதற்காக அரண்மனை எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம்மை கண்டித்தது.
“அவரிடம் சரியான தகவல் இல்லை என்றால், தவறான வழி காட்டும் மற்றும் ஆட்சியாளின் தோற்றத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும் அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று அன்வாருக்கு ஆலோசனை கூறப்படுகிறது”, என்று சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் முகமட் முனிர் பானி ஓர் அறிக்கையில் கூறினார்.
ஆனால், தாம் பதவியில் இருந்த காலத்தில் தாம் ஒரே ஒரு பெயரை மட்டுமே அனுப்பியதாகவும் அதற்கு ஆட்சியாளர்கள் மறுப்பு தெரிவித்ததே இல்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருந்தது பற்றி அரண்மனை பதிலுக்கு எதுவும் கூறவில்லை.
ஒரு நாடு வளர்ச்சியடைந்த நாடு என அளந்தறிவது அதன் பகட்டிலோ அல்லது அதன் படாடோப பேச்சிலோ அல்ல. ஜனநாயக மாண்பும் மாட்சிமையும் மகிமையும் காக்கும் பொறுப்புணர்ந்து செயல்படும் மக்களும் ஆட்சிமுறையும் இருக்கிறதா என்பதைப் பொறுத்தே அமைகிறது. மக்களின் தீர்ப்பு மறுதளிக்கப்படும்போதும், மதிக்கப்படாத போதும் ஜனநாயகம் முடமாக்கப்படுகிறது எனும் உண்மை விளக்கில்லாமலேயே வெளிச்சமாகிறது. வளமான ஆட்சிக்குத் தரமான, ஒழுக்கத்தை உயிரைவிட மதிக்கிற, பண்பாடுமிக்க, பொறுப்புள்ள, நாட்டின் எல்லாத்தரப்பு மக்களின் அபிலாசைகளையும் நிறைவு செய்யும் பணியில் தம்மை முழுமையாக அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபடுத்துகிற மன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்து ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பது வெற்றிபெற்ற கட்சிகளின் கடப்பாடாகும். சந்தர்ப்பவாதிகளையும், சுயநலமிகளையும், மத -இன வெறியர்களையும், விசுவாசமின்றி கட்சிதாவும் உறுப்பினர்களையும், விலை போகிறவர்களையும் ஆட்சியிலே அமர வைத்து அழகு பார்ப்பது மக்களை ஏமாற்றுவது மட்டுமின்றி ஜனநாயகத்தை சீரழிக்கும் செயலுமாகும்.
திராவிடன் அவர்களே! நாம் என்ன சொன்னாலும் எவனும் காதில் போட்டு கொள்ளமாட்டான் கள்.இவங்கள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல எல்லாம் வேண்டும் என்றே நடக்கின்றது. நாமெல்லாம் இதை எல்லாம் பார்த்துக்கொண்டே வாயையும் அதையும் பொத்திக்கொண்டு இருக்கவேண்டும்–இதைதான் இந்த ஈன ஜென்மங்களின் விருப்பம்– ஏனெனில் இன்னும் ஆ ட்டம் போட 4 ஆண்டுகள் இருக்கிறதே. நம் மலேசியர்களுக்கு மறதி அதிகம்–அதிலும் ஒரு இனத்தை மற்ற இனத்தோடு சந்தேகிக்கவே எல்லாம் நடை பெறுகிறது.
என் தாய்த்தமிழே… பாருங்கள் , நாமெல்லாம் ஆதங்கப்படுகிறோம் ;ஆவேசப்படுகிறோம்! நம்முடைய சக்தி எல்லாம் முகம் பாராமலேயே விரையமாகிறது. ஏன் நமது செம்பருத்தி ஆண்டுக்கு ஒரு முறையாவது நம்மை ஒன்று கூட்டி நம் சக்திக்கு அழகூட்டக்கூடாது? நமது கருத்து ஒற்றுமைக்கு உருவம் கொடுக்கக் கூடாது? கருத்து வேற்றுமைக்கு தீர்வு காணக்கூடாது? ஆலோசித்து அரவணைப்பார்களாக!
“ஆனால், தாம் பதவியில் இருந்த காலத்தில் தாம் ஒரே ஒரு பெயரை மட்டுமே அனுப்பியதாகவும் அதற்கு ஆட்சியாளர்கள் மறுப்பு தெரிவித்ததே இல்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருந்தது பற்றி அரண்மனை பதிலுக்கு எதுவும் கூறவில்லை.” … யாரு யாரடா கொளப்புரா? விரும்பிய ஒருவரை நியமித்து கொள்ளலாம் என்றால் , நான்கு மாநில exco கிடைக்கவில்லை என்றால் , என்ன செய்வது ? அப்பொழுது புதிய தேர்தலுக்கு வழி வகுக்குமா ? நடுநிலையை யார் தவறுகிறார்கள் , யார் தவற விடுகிறார்கள் , யார் தவறை பயன்படுத்து கிறார்கள் , யாரெல்லாம் பயன் அடையலாம் , எதற்கெல்லாம் குழப்பலாம் என்று யாராவது இங்கே விளக்க முடுயுமா ?
ஒரு வேலை மகாதிர் வான் அசிசாவை பரிந்துரைத்தால் சுல்தான் அவர்கள் ஒப்புக்கொள்வார் போல ! ஆனால் அது நடக்கற காரியம் அல்ல !
போங்கடா நீங்களும் உங்கள் துப்பு கெட்ட இன வெறி ஆட்சியும் !!!!!
அரண்மனையாரே! டாக்டர் மகாதிருக்கு உங்களுடைய நிராகரிப்பைத் தெரியப்படுத்தி விட்டீர்களா?
OOO சந்தர்ப்பவாதிகளையும், சுயநலமிகளையும், மத -இன வெறியர்களையும், விசுவாசமின்றி கட்சிதாவும் உறுப்பினர்களையும், விலை போகிறவர்களையும் ஆட்சியிலே அமர வைத்து அழகு பார்ப்பது மக்களை ஏமாற்றுவது மட்டுமின்றி ஜனநாயகத்தை சீரழிக்கும் செயலுமாகும். OOO
இந்த நாட்டில் இனி இப்படி நினைப்பதும் … எழுதுவதும் கூட வீண்
ஆகுமோ ???
பெரிய பெரிய மலைகளும் குன்றுகளும் கரைந்துகொண்டிருக்கும்
காலம் இது !
LBJசாலையைக்கடந்து சிரம்பான் செல்லும் சாலையின் இரு மருங்கும் பாருங்கள் … குன்றுகள் எல்லாம் காணாமல் போய்விட்டன
இயற்கையே நாசமாகும் நாட்டில் ஜனநாயகமா ???
பணம் ஐயா …பணம் !பாதாளம் வரை பாயும் !
அன்வார் சார் , உங்கள் திறமையை காட்டுங்கள் ! ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளட்டும் ! மக்கள் உங்கள் பக்கம் !
நஜிப் முஹிடின் உம்னோ மலேசியா மக்களின் நல்ல தோற்றத்துக்கே உலை வைக்கிறான் அது என்னவாம் ? போங்கடா மட சூன்யங்க்களே
சுல்தானின் தோற்றத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தாதீர், அன்வாருக்கு ஆலோசனை!! அப்படியா
ஓட்டு போட்ட மக்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தாதீர் ,சுல்தானுக்கு மக்கள் ஆலோசனை
மோகன் சார், நமது துணை பிரதமரே இளைய மலாய்காரர்களின் சிந்தனையும் நோக்கும் மாறியிருப்பதாக கூறி அதற்கொப்ப UMNO தனது சிந்தனையும் மாற்றிக்கொள்ளாவிட்டால் அடுத்த பொது தேர்தலில் கண்டிப்பாக தோல்வியை தழுவும் என்று UMNO அங்கத்தினர்களுக்கு கூறியுள்ளார். இன்று நடக்கிற அரசியல் நடப்பு, இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின் தான் நடக்கும் என்று நான் நினைத்திருந்தேன். இந்த அரசியல் மாற்றத்தை நான் என் வாழ்நாளில் காண முடியாது என்று நினைத்ததும் உண்டு. மாக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர். அந்த மலாய் இளைஞரை போல் மற்ற இளைஞரும், குறிப்பாக இந்திய இளைஞரும் தத்தம் சிந்தனை மற்றும் எதிர்நோக்கில் மாற்றம் கண்டால் மேலும் நலமளிக்கும். நாடு அனைவரின் தேவைகளையும் சந்திக்கும் அனால் தனிமனிதர்களின் பேராசைக்கு தன்னால் ஈடுகொடுக்க இயலாது.அடுத்தவர் நலனை நினைப்பவர்தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம் என்று ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவர் பால் அன்பும் அக்கறையும் கொண்டு அனைவரும் நலமோடும் வளமோடும் வாழ இறைவன் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்தட்டும்.
இங்கு நாம் சுல்தான்களுக்கு ஆலோசனையும் கூறமுடியாது விமர்சிக்கவும் முடியாது. கவனம் கவனம் கவனம்.
THOVANNA PAAVANNA ,,,அவர்களே ,என்னார் சார் என்று சொன்னதுக்கு நன்றி ,,
“இங்கு நாம் சுல்தான்களுக்கு ஆலோசனையும் கூறமுடியாது விமர்சிக்கவும் முடியாது. கவனம் கவனம் கவனம்.”
இந்த வரியை படித்தவுடன் எனக்கு சிந்தனைக்கு ஒன்று தோன்றியது .உலகில் இல்லாத அதிசியம் இந்த மலேசியாவில் நடக்கிறது ,அதிகாரத்தில் உள்ள யாரையும் எதிர்க்க முடியாது .அப்படியே எடுத்தால் அந்த படைத்த ஆண்டவனுக்கே பயப்படாமல் தண்டனை வழங்கி விடுவார்கள் ,அப்படி பட்டு கொடூரமான ஆட்சி இந்த நாட்டில் நடக்கிறது ,அமெரிக்காவில் பார்த்தல் ,இந்த டத்தோ.டான் ஸ்ரீ ,இது போன்ற பட்டங்கள் கிடையாது ,இருந்தாலும் SIR என்ற பட்டம்தான் கேள்வி பட்டு இருக்கேன் ,அதை தவித்து ஒரு நாட்டை PRESIDENT ஆட்சி புரிவதும் கேள்வி பட்டு இருக்கேன் ,அதையும் தவிர்த்து இந்தியாவில் பிரதமர் ஆட்சி என்று கேள்வி பட்டு இருக்கேன் நீங்கள் சொன்ன மாதிரி ஆலோசனையும் விமசனமும் கூற முடியாத அந்த தலைகள் இந்த நாட்டுக்கு அவசியமா ,சில நாடுகளில் அந்த சர்வதிகார பதவியில் உள்ளவர்களை வேரோடு அழைத்துவிட்டார்களே ,,மக்களுக்குதனே முன் உரிமை கொடுக்க வேண்டும் ,,அப்படி இல்லை என்றால் நான் இந்த நாட்டைவிட்டு வெளிநாட்டில் போயி தங்கி அங்கேயே பிச்சை எடுத்து பொழப்பு நடத்தினால் கௌரவமாக இருக்கும் என்று நினைக்கிறேன் ,இங்கே இருந்து சாவதை விட ,நாட்டி விட்டு வெளியேறினால் தான் நல்லது என்று நினைக்கிறேன் ,,அடுத்து நாட்டை விட்டு வெளிஎரே முயற்சி செய்ய போகிறேன் .என் குடும்பம் இங்கே இருந்து படிச்சி கிழிப்பதை விடா வெளிநாட்டில் பிச்சை எடுப்பதே மேல் .நன்றி சகோதரா
சகோதரர் மோகன் நாம் வாழ பிறந்தவர்கள் கோழைகள் அல்ல. அநீதி சில காலம் மேலோங்கி இருப்பது போல் தோன்றும் ஆனால் கண்டிப்பாக அது நிலைக்காது. இந்த அரசியல் குழப்பத்திலிருந்தும் நன்மை தோறும். சுயநலவாதிகள் எல்லா இனத்திலும் உண்டு எல்லா இடத்திலும் உண்டு. நாம் எதிர்நீச்சல் போடுவோம். நாம் உழைத்து உண்பவர்கள். parasite போல அடுத்தவர் உழைப்பில் வாழாதவர்கள். நாம் நமது தாய் மொழியோடு மற்ற மொழியையும் கற்று சாதனை படைக்கவில்லையா ? தேவை ஏற்ப்பட்டால் எதையும் நாம் கற்றுக்கொள்ளுவோம்.துன் மகாதீர் கூறினார் 1930ம் ஆண்டுகளில் மாபெரும் பொருளாதார சிக்கலில் அன்றைய மலேயா தவித்த பொழுது அன்று அனேக இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்களாம். அப்படி அவர்கள் வெளியேறாமல் இருந்திருந்தால் இன்றும் நாட்டின் பொருளாதரத்தை இந்தியர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள் என்று ஒரு முறை கூறினார். அன்று நமது முன்னோர்கள் நாட்டைவிட்டு போக எவ்வித தடையும் இல்லை.அவர்கள் எங்கே போனார்கள்? தாங்கள் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே திரும்பி போயினர்.இன்று அப்படியில்லை. எந்த நாட்டுக்கு போக முயன்றாலும் (இந்தியா உட்பட) அவ்வளவு சுலபம் அல்ல. அந்நாட்டுக்கு தேவையான திறமை நம்மிடம் இருந்தால் நம்மை இருகரம் விரித்து ஏற்றுக்கொள்வார்கள், இல்லையேல். நாம் அவர்களுக்கு பாரமாகிவிடுவோம் என்று ஏற்க மறுத்துவிடுவர். நம்முடைய திறமை இந்நாட்டுக்கும் தேவை என்றால் நம்மையும் மதித்து ஏற்றுகொள்ளவைப்போம். எல்லா இனத்திலும் நியாயவாதிகள் இருப்பார்கள். பெரும்பாலோர் அநியாயமாக நடந்தாலும் குறைந்த அளவு நியாயவாதிகளின் குரலும் ஒருநாள் உரக்க ஒலிக்கும், அதுவும் வெகு விரைவில் ஒலிக்கும். அதனை நோக்கி இறைவன் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக..