முக்தாமார் – அம்னோவுடன் “ஒற்றுமை அரசாங்கம்” என்பதே இல்லை என்று இன்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் உறுதியாக் கூறினார். பக்கத்தான் பங்காளிகள் அவர்களின் அரசியல் ஒப்பந்தத்திற்கு துரோகம் இழைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பாஸ் கட்சி அம்னோவுடன் இணந்து செயல்படும் என்று பேசப்படுவது கட்சியின் தோற்றத்தை கறைபடுத்துவதற்கான அவதூறுகளாகும் என்று இன்று பத்து பகாட்டில் கட்சியின் பேராளர்கள் கூட்டத்தில் கொள்கை உரையாற்றிய போது ஹாடி கூறினார்.
கடந்த காலங்களில் பல அரசியல் கட்சிகளுடன் கொண்டிருந்த ஒத்துழைப்புக்கு பாஸ் துரோகம் இழைத்ததே இல்லை என்றாரவர்.
“பாஸ்சின் போராட்ட வரலாற்றின் தொடக்கத்திலிருந்து, நாங்கள் நமது அரசியல் ஒத்துழைப்பு பங்காளிகளுக்கு துரோகம் இழைத்ததே இல்லை.
“ஆகவே, இந்த அரசியல் ஒத்துழைப்புக்கு துரோகம் இழைக்க வேண்டாம் என்று நாங்கள் நமது அரசியல் ஒத்துழைப்பு பங்காளிகளை கேட்டுக் கொள்கிறோம்”, என்று ஹாடி பலத்த ஆதரவுக் குரலோசைக்கிடையில் கூறினார்.
முக்கியமான முடிவுகள் அனைத்தும் ஒருமித்த இசைவின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும் என்பதை ஹாடி வலியுறுத்தினார்.
இவர்கள் அரசியல்வாதிகளே அல்லர். முதலிலிருந்தே குட்டையைக் குழப்பிவிட்டு ஏதாவது வெளியே வருகிறதா? அதில் தீ மூட்டி, பிறகு தீயைச் சுற்றி வந்து கும்மியடிக்கலாம் என ஆசைபட்டவர் அறிக்கை விடுகிறார்… ” பாக்காத்தான் பங்காளிகள் அவர்களின் அரசியல் ஒப்பந்தத்திற்கு பங்கம் விளைவிக்க வேண்டாம்! ” இதைப் பார்க்கும்போது … ஏதோ ஒன்று வேதம் ஓதுவதாகச் சொல்வார்களே … அதுபோல் இருக்கிறது நண்பர்களே! நாம் வாக்களிக்கும் போது , இவர்களை எல்லாம் எச்சரிக்கையாக கவனத்தில் வைத்துக்கொண்டு வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமைகளில் ஒன்றாகும்!
கண்ணுக்கு எட்டிய பிறகு சூரிய நமஸ்க்காரம்
இப்போதைக்கு உம்நோவுடன் ஒற்றுமை அரசு இல்லை. ஆனால் சிலாங்கூர் மந்திரி புசார் போன்ற விவகாரங்களில் மட்டும் நாங்கள் அவர்களுக்கு மறைமுக ஆதரவு தெரிவிப்போம், மக்கள் எங்களை நல்லவர்கள் என்று நம்பிவிடுவார்கள். நாங்கள் ore குட்டையில் மீன் பிடித்த மாமன் மச்சான்கள்.
இந்த வேதம் ஓதியின் பாசமிக்க கோரிக்கையின் பின்புலம் என்னவென்பது செவ்வாய்க்கிழமை எம்.பி. சத்திய பிரமாணத்தின்போது வெளிச்சத்திற்கு வரும். இவர்களின் ஆட்கள் தேர்வானால் அதை நீதிக்கட்சியும், டிஏபியும் ஆதரிக்கவேண்டும் என்பதே இந்த அமைதி விரும்பியின் இந்த முன் அறிக்கை. இல்லை என்று மறுத்தாலோ பாக்காத்தான் பங்காளிகளாகிய நீதிக்கட்சிக்கும் டிஏபிக்கும் துரோகிகள் பட்டமும், ஒப்பந்தத்தை மீறியவர்கள் எனும் இழிச்சொல்லும் இவர்களால் ஏற்படுத்தப்படும் என்பதற்கான இந்த ஹாடியின் முன்னோட்ட அறிக்கை!
“ஆடுங்கடா பதவியைச் சுத்தி … அய்யனாரு (மக்களின்) வெட்டுக்கத்தி ஓட்டு வடிவில்! “
குட்டையை குழப்புவதே பாஸ்சில் உள்ள உலாமாக்கள் !
இவன் இரண்டாம் கெட்டான் பச்சொந்தி????
இவர்கள் காண்டா நண்டுபோல,உப்பு தண்ணியிலும் இருப்பார்கள்
நல்ல தண்ணியிலும் இருப்பார்கள், வேடதாரிகள்.
அடுத்த தேர்தலில் இவர்களுக்கு சரியானப்படம் புகட்ட வேண்டும் !
‘Now you see, now you don’t’. ஹடியின் அரசியல் சித்தாட்டத்தின் தீ தனக்கெதிரே திரும்பி தாக்க வந்ததால் இந்த திடீர் பல்டி. பாஸ் கட்சியை பிளவுப் படுத்தி உம்னோ வெற்றிக் கொண்டது. வாழ்க உம்னோவின் செய்வினை.
ஆசாமி அவர்களே… உங்கள் தமிழ் எனக்குப் பிடித்திருக்கிறது.
“இவர்கள்….
உப்புத் தண்ணியிலும் இருப்பார்கள்
நல்லத் தண்ணியிலும் இருப்பார்கள்
வேடதாரிகள்…
காண்டா நண்டுகள் போல ! ”
இப்படி வரிசைப்படுத்தி எழுதி இருந்தால் நீங்கள் ஒரு புதுக்கவிஞனாகி இருப்பீர்கள். அழகான உவமானம், நல்ல கற்பனை. ஆசாமி … உங்களுக்குள்ளே ஒரு கவிஞன் இருக்கிறான். அவனை வெளியில் கொண்டுவாருங்கள் அய்யா.
சாமுண்டி அவர்களே… நீங்களும் கவிஞராகலாம் முயன்றால்..
“வேட்டைக்காக
இருக்கும்
இடத்திற்குத் தக்க
நிறங்களை மாற்றும் இவன்
ஒரு பச்சோந்தி..!
– கவிஞர் சாமுண்டி
வரும் செய்வாய் கிழமை கலங்கிய குட்டை தெளிவாகி விடும் ! எந்த குட்டையில் எந்த மீனோ ?
முன்னுக்கு பேசி பின்னால் வழிக்கிறான் என் தலைவன் நஜிப் பை இவன் நான் வலிப்பது போலவே வழிக்கிறான்