முஸ்லிமாக மதம் மாறி அவரது ஆறு மாத பெண் குழந்தையைக் கடத்திச் சென்று அக்குழந்தையும் மதம் மாற்றம் செய்து, நீதிமன அவமதிப்புக்காளான கே.பத்மநாதன் என்ற முகமட் ரித்துவானை கைது செய்து இப்போது ஆறு வயதாகி விட்ட குழந்தை பிரசன்னா டிக்சாவை மீட்குமாறு ஈப்போ உயர்நீதிமன்றம் போலீஸ் படை தலைவர் காலிட் அபு பாக்காருக்கு உத்தர விட்டிருந்தது. அந்த உத்தரவை நிறைவேற்ற ஐஜிப்பிக்கு நீதிமன்றம் ஏழு நாள் அவகாசம் அளித்திருந்தது.
ஈப்போ உயர்நீதிமன்றம் ஐஜிபிக்கு விடுத்திருந்த உத்தரவுக்கு எதிராக சட்டத்துறை தலைவர் அலுவலகம் மேல்முறையீடு செய்து அதற்கான அறிவிப்பு கடிதத்தை இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பாலர்பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் வழக்குரைஞர் மு. குலசேகரனின் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளது.
இந்த மேல்முறையீடு குறித்து வழக்குரைஞரும் டிஎபி நாடாளுமன்ற உறுப்பினருமான மு. குல்சேகரன் இந்த சமயங்கிடையிலான பராமரிப்பு தகராற்றில் நியாயம் மற்றும் நீதி ஆகியவற்றை கவனத்தில் கொண்டு சட்டத்துறை தலைவர் (ஏஜி) இந்த மேல்முறையீட்டை தொடரக்கூடாது என்றார்.
ஈப்போ உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக செய்யப்படும் இந்த மேல்முறையீட்டின் வழி ஏஜி போலீஸ் படைத் தலைவருக்கும் இதர அரசு ஊழியர்களுக்கும் தவறான செய்தியை அனுப்புகிறார் என்று குலசேகரன் தெரிவித்தார். நீதிமன்ற தீர்ப்புகள் இறுதியானவை அல்ல என்பது இந்த மேல்முறையீட்டின் வழி அறிவுறுத்தப்படுகிறது என்றாரவர்.
அனைத்து நீதிமன்ற உத்தரவுகளும் கைது ஆணைகளும் எதிர்க்கேள்வி இன்றி அமல்படுத்தப்பட வேண்டும். அது இவ்வழக்கில் குழந்தை பிரசன்னா டிக்சா அதன் தாயார் மற்றும் உடன்பிறப்புகளுடன் மீண்டும் ஒன்றுசேர்வதற்கு உதவும் என்று குலா கூறினார்.
மேல்முறையீடு செய்வதின் வழி இந்த வழக்கில் ஐஜிபின் செயல்பாடுகள் சரியானது என்று ஏஜி ஒப்புக்கொள்வதாகத் தெரிகிறது. இது உண்மையான நிலையா என்று அவர் மேலும் வினவினார்.
“பிரதமர் நஜிப், உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி மற்றும் இதர அமைச்சர்கள் இம்மேல்முறையீடு முடிவை ஆதரிக்கிறார்களா?”, என்று அவர் கேட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை, ஈப்போ உயர்நீதிமன்றம் ரித்துவானை கைதி செய்து பிரசன்னா டிக்சாவை ஏழு நாள்களுக்குள் மீட்குமாறு காலிட்டுக்கும் போலீஸ்சுக்கும் உத்தர விட்டது.
ஏஜி மேல்முறையீட்டு நடவடிக்கையை கைவிட்டால் அது இந்திராவுக்கு நியாயம் கிடைக்க வகை செய்யும்.
ரித்துவான் அவருக்கு உரிய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு விட்டார். இனிமேல் எவ்வழியும் இல்லை. மேலும், அவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டிலிருந்து விடுபடவில்லை என்பதைச் சுட்டிக் காட்டிய குலா, “அவரை கைது செய்ய மறுப்பது நீதிமன்ற உத்தரவுகளை எவ்விதத் தண்டனைக்கும் உட்படுத்தப்படாமல் உதாசீனப்படுத்தலாம் என்ற போலீயான கூற்றுக்கு வலிமை அளிக்கிறது”, என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
கடந்த புதன்கிழமை மேல்முறையீட்டு நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்புக்கு எதிராக ரித்துவான் மேல்முறையீடு செய்ய கூடுதல் அவகாசம் கோரி செய்திருந்த மனுவை நிராகரித்துள்ளது.
இவ்வழக்கு 2009 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையில் தீர்வு காணப்படாமல் இருந்து வருவதை குலா சுட்டிக் காட்டினார்.
குலாவுடன் ஈப்போ செய்தியாளர் கூட்டத்தில் இருந்த இந்திரா காந்தி எனது முழந்தையை திரும்பப் பெறுவதற்கு ஏன் இவ்வளவு காலம் பிடிக்கிறது என்று கேட்டார்.
ஒரு குடிகாரன் கூட இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டால் அவனை எங்களின் இஸ்லாமிய அரசாங்கம் (?) அவனுக்காக கடைசி வரையில் போராடும். நீதிமன்ற தீர்ப்புகள் எல்லாம் எங்களைப் பாதிக்காது!
AG கு என்னாங்க கல்வித தகுதி ? இன்று தேச நிந்தனை சட்டம் 1948 ல் உள்ளதை பாவித்து பலரை உள்ளே தள்ளியதாம்! 1957 மெர்டெக்காவுக்கு பிறகு தேச நிந்தனை சட்டம் பாவிக்க முடியாதாம்! இன்று நீதிமன்றத்தின் முடிவுக்கு AG மறுப்பு மனு போட்டால் ரிதுவானும் IGP யும் சட்டத்தை சாப்பிட்டு விடுவார்கள் போல ?
ஐஜிபிக்கு இடப்பட்ட உத்தரவுக்கு எதிராக ஏஜி மேல்முறையீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும், இல்லையேல் AG-யும், IGP-யும் சேர்ந்து நீதிமன்றத்தை சர்க்கஸ் கூடாரமாகவும், நீதிபதிகளை சர்க்கஸ் கோமாளிகளாக நினைக்கிறார்கள் என்று அர்த்தமாகும்.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பது மாறி
மலேசியாவில் நீதிமன்றம் நீதிபதிகள் இரண்டுபட்டால் AG-IGPகளுக்கு கொண்டாட்டம் மாற்றி கூறி உதாரணம் சொல்ல வேண்டி வரும்.
தாய்இந்திரா காந்திக்கு தகுந்த நீதி கிடைக்க வேண்டுமாறு இறைவனை வேண்டுகிறேன் !
ஒரு கணவன் மனைவி இருவருக்குமான குடும்ப தகராறு..அதன் விளைவு இரு பெரும் சமயம் ,இருபெரும் இனம் ஆகியவற்றுக்கு சங்கடம்.பிரச்சனையை தீர்க்க தெரியாத அந்த மடையன் மதம் மாறியது முட்டாள் தனம்.ஆனால் சட்டம் தெரிந்தவர்கள், பதவியில் உள்ளவர்கள் இப்படி முட்டாள் தனமாக செயல் படுவது வெக்கக்கேடு!
இந்த சட்டத் துறை தலைவரும் ஐ.ஜி.பி யும் சேர்ந்து நீதி துறையையே கேளிக்குரியாக்கி விட்டார்கள்.இங்கு நீதித்துறையில் இனவாதமும் மதவாதமும் புகுந்து நர்த்தனமாடுவதை பார்த்துக்கொண்டு இவர்கள் சர்வ சாதாரணமாக காயை நகர்த்துகின்றனர்.ஒரு தாயின் உள்ளக் குமுறலை புரிந்துக்கொள்ளாத இவர்களும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவர்கள்தான் என்பதை மறந்து விட்டார்களே.இவர்களிடமுள்ள மனிதாபிமானம் எங்கே சென்றது? நீதித் துறையும் சட்டத்தை அமுலாக்கும் துறையும் பிண்ணிப் பிணைந்து ஒரு சாதாரண தாய்க்கு எதிராக இப்படி மல்லுக்கட்டி கொண்டு நிற்கிறார்களே,இதற்கு மலேசியா அரசியலைமைப்புச் சட்டம் இடம் கொடுக்கிறதா?அல்லது இனவாதம் இந்த விஷயத்தில் தலை தூக்கி நிற்கின்றதா?
ஒரு ஹிந்து தாய்க்கு, இப்படி கொடுமையா …!
சட்டமா ? மதமா ??
மத குருடர்கள் ……!
ஆனால் கே.பத்மநாதன் முட்டாள் அல்ல. ஒரு சோம்பேறி! அவன் இந்துவாக இருந்தபோது வேலை செய்துதான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது கட்டாயம். அந்தப் பொறுப்பை அவனால் நிறைவேற்ற முடியவில்லை. இப்போது அவனுக்கு ராஜ மரியாதை. ராஜ உபசரணை. உதவி செய்ய அரசாங்கமே துணை! சோம்பேறிகளுக்கு வேறு என்ன வேண்டும்?
சட்டம் சாதாரண மக்களுக்கு மட்டும்தான்..AG கும் PG கும் வேறு சட்டம் இருக்கும் போல..இதே நம் இனமா இருந்த தீர்ப்பு சொல்வதற்கு முன்பே ஆளு உள்ள இருப்பார்..
கவலை வேண்டாம்.. குழந்தை கிழவியாகும் வரை இந்த உரிமை போராட்டம் தொடரும். அக்குழந்தை மன அழுத்தம் அடைந்து வாழ்வில் விரக்தி அடைந்து மெண்டல் ஆனாலும் யாருக்கும் கவலை இல்லை.. மதம் மட்டுமே போதும்.. குணம் குப்பைதான் இந்த உலகில்.. அந்த குழந்தைக்கு ஒரு மனம் உண்டு.. மத பிரிவில் அது வுமையாய் கிடக்கிறது… என்ன மனிதர் இவர்கள் ???