சிலாங்கூர் மாநில புதிய மந்திரி புசார் அடுத்த செவ்வாய்க்கிழமை பதவிப் பிரமாணம் செய்யப்பட விருக்கிறார். ஆனால் வேட்பாளர் பற்றிய விபரம் எதுவும் தெரியவில்லை.
மலேசியாகினி தொடர்பு கொண்ட போது சுல்தானின் தனிப்பட்ட செயளாளர் முகம்மட் முனிர் பாணி இதனை உறுதிப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு விட்டன என்று அவர் தெரிவித்தார்.
ஆனால், புதிய மந்திரி புசார் யார் அல்லது எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்ற தகவல் எதனையும் தர அவர் மறுத்து விட்டார்.
மலேசியாகினி பார்த்துள்ள அழைப்பிதழின்படி பதவிப் பிரமாணம் கிள்ளான் அலாம் ஷா அரண்மனையில் காலை மணி 10.00 க்கு நடைபெறும்.
ஷா அலாம், மெஸ்திகா அரண்மனை அதிகாரிகள் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழ் மற்றும் அதில் காணப்படும் விபரங்கள் உண்மையானவை என்றனர்.
டிஎபி டோனி புவா தாம் அது பற்றி படித்ததாகவும் ஆனால் எதுவும் தெரியாது என்று மலேசியாகினியிடம் கூறினார்.
பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர்.
தங்களுக்கு அழைப்பிதழ்கள் இன்னும் கிடைக்கவில்லை பிகேஆர் வேட்பாளர்கள் வான் அஸிசாவும் அஸ்மின் அலியும் தொடர்பு கொண்ட போது கூறினர்.
தங்களுக்கு விபரங்கள் எதுவும் தெரியாது என்றும் அவர்கள் கூறிக்கொண்டனர்.
சுல்தானின் பெயரைக் கெடுப்பதற்கு இப்படிப் பல பேர் புறப்பட்டிருக்கின்றனர். அவர் யாரையோ பார்த்து பயந்து ஒளிவது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். செய்தியில் உண்மை இல்லை!
மர்ம தேசம் !!!!!!!!!!!!!!!!!!!!!!,
உலகில் எங்கும் நிகழா மாபெரும் அதிசயம் ???????
வாழ்க ஜன நாயகம் …..,நவீன ஜனநாயகம் !!!!!!!!!!!!!!!!!
யார் மந்திரி பேசார் என்று யாருக்கும் தெரியவில்லை ,ம்ம் ,ஒரு வேலை ஆ தி மு காவில் இருந்து ராமராஜன் அவர்களை தற்காலிக மந்திரி பேசாராக நியமனம் செய்ய போறார்களா ? நீங்களும் உங்க ஆட்சியும் ச்சி,,,
ஐயோ … எனக்கு பதியம் புடிக்குது ….எனக்கு பதியம் புடிக்குது ….(இதை SJ SURIYA ஸ்டைலில் நினைத்து பார்க்கவும்) ……..
அரண்மனை நல்ல செய்தியை சொல்லும்மா ? என்னமோ நடக்குது மர்மமா இருக்குது !
திகில் பரபரப்பு , என்னதான் நடக்குது .செவ்வாய் தெரியும் இந்த முடிவு .
தண்ணீர் உடன்படிக்கை எல்லாம் முடிந்த பிறகுதான் இந்த முதலமைச்சர் பிரச்சனை தீரும் என்றேன். தீர்ந்து விட்டது.
வான் அசிஷா புதிய மந்திரி புசார்,பதவி எடுப்பு விழ அடுத்த வாரம் செவாய்கிழமை காலை மணி 10.
பெரிய காமிடி நடக்க போகுது !
பாஸ்காரர்கள் ஒழுங்கா இருந்தா இந்த சிக்கலே இல்லை.