அடுத்த வாரம், பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி சிலாங்கூர் மாநிலத்தின் புதிய மந்திரி புசாராக நியமிக்கப்படலாம் என்ற ஆருடம் வலுவடைந்து வருகிறது.
அரண்மனைக்கு நெருக்கமான ஒரு மூத்த அரசியல் பார்வையாளர் அஸ்மின் அந்த வேலைக்கு மிகத் தகுதியானவர் என்று ஒப்புக் கொண்டார்.
“ஒன்று மட்டும் நிச்சயம், வான் அஸிசா மந்திரி புசாராக மாட்டார்”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
அஸ்மின் பெயர் குறிப்பிடப்பட்டால், அன்வார் நிச்சயமாக விட்டுக் கொடுப்பார் என்று பிகேஆருக்கு நெருக்கமானவர்கள் மலேசியாகினியிடம் கூறினர்.
“அன்வார் ஆட்சியாளர் முடிவுக்கு பணிந்தால், கட்சியில் அஸ்மின் அலிக்கு எதிரான கூட்டத்தினர் அன்வாரிடம் பணிய வேண்டியிருக்கும்”, என்று பெயரை வெளியிட விரும்பாத நெருக்கமான ஒருவர் கூறினார்.
மேலும், பிகேஆர் சிலாங்கூர் தலைவரான அஸ்மின் அலி நியமிக்கப்பட்டால் பக்கத்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொணர மாட்டார்கள். மாறாக, பாஸ் வேட்பாளர் நியமிக்கப்பட்டால் அது சாத்தியமே.
இதனிடையே, அதன் உறுப்பினர் ஒருவரை சுல்தான் மந்திரி புசாராக நியமிக்க தேர்வு செய்தால் அதை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதில் பாஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், மந்திரி புசார் பதவி பாஸ் வேட்பாளருக்கு வழங்கப்பட்டால் கட்சி அதனை நிராகரிக்கும் என்று பாஸ் துனைத் தலைவர் முகம்மட் சாபு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
“அப்பதவி பாஸ்சுக்கு வழங்கப்பட்டால் நாங்கள் பாஸ் மத்திய குழு செப்டெம்பர் 7 இல் எடுத்திருந்த முடிவுப்படி அதனை நிராகரிப்போம்”, என்று அவர் மீண்டும் இன்று பத்து பகாட்டில் செய்தியாளர்களிடம் வலியுறுத்திக் கூறினார்.
பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலியும் மந்திரி புசார் இருக்கை பிகேஆருக்கு சொந்தமானது என்றார்.
“நாங்கள் முடிவெடுத்து விட்டோம். அது பிகேஆருக்குச் சொந்தமானது. அது பாஸ் மத்திய குழுவின் முடிவு”, என்றாரவர்.
MB யை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்கள் கையில் இல்லையா ? இது ஜனநாயக நாடுதானே !
இது முடியாட்சியுடன் கூடிய ஜனநாயக நாடு. இந்த நடைமுறை சரிதான். ஆனால், நான் அறிந்த வரை இப்போதுதான், ஜனநாயகத்துக்கு அப்பால் நாட்டின் சாசனத்திற்கு உற்பட்டு தம் அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்.
Daulat Tuanku
Azmin அவர்களே , ஒரு மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட கட்சியில் நீங்கள் இருகிறிர்கள் ! அந்த கட்சியின் தலைவரை அவமதிக்கிறார்கள் …. அதே வேளையில் உங்களுக்கு பதவி கிடைக்கும் என்று யுகங்கள் … ஆனால் நீங்கள் ஏற்கனவே தட்டி கழித்து விட்டேர்கள் , நீங்கள் நிச்சய மாக khalid அவர்களைபோல் நடந்து கொள்ள மாட்ட்ரிர்கள் என்று… இருபினும் திசை திருப்ப பல கதைகள் … PAS கட்சி யாரையோ வைத்து குழப்ப போகிறது …. அடுத்தது … PAS சை பகடானில் இருந்து விளக்கி வைக்க வேண்டிய நேரம் இது ….. அதற்குள்ளே PAS சில் இருந்து சிலர் PKR ரில் நுழையும் நேரம் அல்லது புதிய PAS உருவாகும் நேரம்……..நிறைய வேலை இருக்கும் போலிருக்கிறதே !!!!
காஜாங் அலையை சம்பானில் ஏற்றி மீன்கள் விக்கிற மாதிரி கருவாடு சந்தையை நாத்தமாக்கியா ரபிசி மோகம் மேகமா களைந்து பாகதானை பாகார் பண்ணியதுதான் மிச்சம்.
அசிங்கப்பட்டு போன பாகாதான் அரசியல் தலைவர்கள் இனி அரசியலுக்கு லைக்கு இல்லை இவர்களை நம்பி புத்ரா ஜெயா அரசு கனவு இனி இரவு தேவதைகளின் தேடலில்தான் முடியும்.
மாநாட்டில் ரபிசி கூவியதை நாமும் கொஞ்சம் கொக்கரிக்கலாம் என்று நினைக்கிறன்.கட்சியின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கட்சியை விட்டு போகலாம் என்றார். இன்று இவர் வகுத்த காஜாங் கனவா சாத்தே கட்சியின் வான் அக்காவின் MB முடிவு மங்கி போச்சி , ஆக கட்சியின் ஏக்கம் கோணல் மாணலாய் போனதால் கொள்கை படி இவரும் கட்சியை விட்டு கழன்றால் இன்னொரு பாலிமென்ட் தேர்தல் வரும்.கட்சி கொள்கையாவது கற்போடு . இருக்கும் என்று நம்பலாம்.
MB பதவி பாசுக்கு போனால் இன்னொரு தெருவோர சுச்சி அரசியல் நாடகம் அரங்கேறும்.பாகாதான் பரவெளி விமானம் பாக்கார் ஆகலாம்.எல்லாம் மாநில தண்ணீர் கதை போல சுற்று சூழலை பொறுத்து விசியம் .கடசியா மக்களுக்கு தண்ணி கிடச்சா ஓகே. ஒட்டு வரும்போது வேடிக்கை காட்டலாம். இப்போதைக்கு இந்த இலவுக்கு தலை முழுகுவோம்.அடுத்த ஒப்பாரிக்கு !சிவாய நமக ரேஹெர்சல் பார்ப்போம்.
பேசாமல் அன்வர் தாதா & வான் பாட்டியும் வீட்டுல பேர புள்ளைங்களோட சந்தோசமா இருங்க இந்த அரசியல் உங்களுக்கு வேணா நீங்க தில்லு முள்ளு பண்ணின எப்படி நடாகும் ஆண்டவனுக்கு இது புடிக்கல பொய் பிதலடம் போட்ட இதுதான் கதி எல்லாம் நாசமா போச்சா இத்துட முடிச்சிடுங்க உங்க சப்ஜெக் ரொம்ப ஆட்டம் போடதிங்க PKR நம்பி சேர்ந்தா மண்ணை கௌவனும் தேவய என்னக்கு இனிமேல் சாகும் வரைக்கும் vote போடமடன் இது சதயம்
“அரசியல் விகடகவி” பொன் ரங்கன் தமது திருவாய் மலர்ந்து அருளி விட்டார்! இனி எல்லாம் அவர் திருவாய் மொழி வழியே நடைபெறும்!! இதற்கு மாறான செயல் ஏதும் நடை பெற இனி வாய்ப்பே இல்லை!! யாரும்…வாயை பிளந்து … இவரின் திரு மொழிக்கு எதிராக ஏதும் நடபிபெரும் என்ன… காத்திருக்க வேண்டாம்….. இது பொன் ரங்கனின் தண்டோரா….. தண்டோரா….. தண்டோரா…….. “அசுபம்” ….
ஆட்சியாளர்களும் அம்னோ வாதிகளும் ஒன்று சேர்ந்து இந்நாட்டில் அம்னோ ஊழல் வாதிகள் ஆட்சியில் இருக்கவே இவ்வளவு அநியாயங்களும்.
பேரரசரின் அதிகாரத்தை குறைபதர்காக மகாதீர் நாடாளும் மற்றதில் ஒரு புதிய சட்டத்தையே கொண்டுவந்தாக ஞாபங்கம் ! அதாவது நாடாளும் மற்றம் கொண்டுவரும் சட்டமாற்றங்கள் அல்லது புதிய அமைப்பு சட்டம் முறையாக மாமன்னரிடம் சமர்பிக்கப்படும் . 14 நாட்கள் வரை எந்தவொரு பதிலும் இல்லையென்றாலும், பிரதமரின் ஆணையில் அதிகாரத்தில் அந்த சட்டம் அமுல்படுத்தப் படும். இது மகாதீர் காலத்தில் மன்னர்களுக்கு எதிராக கொண்டுவந்த திருத்தும். அப்போது எந்த வேமானியும் மகாதீருக்கு எதிராக வாய் திறக்கவில்லை . காரணம் அது அம்னோ காரன் செய்தது . இப்போ ? சுல்தானின் ஆணையை ஏற்கவில்லை , துரோகிகள் என்று குதிக்கிறார்கள்!
பொன் ரங்கனின் கருத்துக்களை இவ்வங்கத்தில் ஏராளமானோர் எதிர்க் கின்றனர். ஆனால், என்ன ஆச்சர்யம். அவர் சொன்னதுபோலத்தான் சிலாங்கூரில் நடந்தேறியுள்ளது.
அடுத்த பொது தேர்தலில் ,சிலாங்கொரில் மட்டும் தேர்தல் கிடையாது ,,எவன் வேண்டுமானாலும் மந்திரி பேசாராக ஆகலாம் ,,,ஒட்டு போட்ட மக்கள் மடையர்கலாம் ,இவனுங்க அறிவாளிகலாம் ,ம்ம்ம்ம்
ஐயா சிங்கம் ! கடிவாளம் யார் கையில் இருக்கிறது என்று உணர்ந்து கருத்து சொன்னால் சரியாகத்தான் இருக்கும் , இதில் என்ன பெரிய ஆசிரியம் இருக்கு ?
யார் சொன்னது அடுத்த MB ஆ தி மு காவின் ராமராஜன்
சிங்கம் அவர்களே, பொன் ரங்கன் சொல்வது போல் எல்லாம் நடக்கவில்லை ! ஒன்று அல்லது இரண்டு மட்டும் தான் ! அதிலும் பல விதமான கிளைமாக்ஸ் !
பொன் ரங்கன் வாயில தேன் ஊத்தணும் வாழ்க பொன் ரங்கன் you are the BEST I LIKE THAT உங்களுக்கு எல்லாம் தெரியுது
பொன் ரங்கன் அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்றால், வரும் புதன் கிழமை செலங்கோரில் என்ன நடக்கும்னு சொல்ல முடியுமா ?